உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

123

"தேர்தல்வேண்டும் ஆனால் உடனே வேண்டாம்" (8:9). தேர்தல் வருகிறதாம்; யாருக்கு வாக்கு (9:2) கொள்கை உள்ளோர் குன்றாவர் கொள்கை இலார் குன்றுவர் (10:2) "யாருக்கு வாக்கு” (10:4) தேர்தல் - தெளிதல் தெரிதல்" (10:5) சொல்லியமைக்குப் பாராட்டுகள் செய்யாமைக்கு" (10:8) என்றெல்லாம் ஆசிரிய உரைகள் கிளர்கின்றன.

சொன்னதைச் செய்க

-

சென்னை பெரியார் திடலில் நடந்த திருக்குறள் கட்டுரைகள் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் “திருக்குறள் தேசிய நூல் -உலகநூல் என்பதைவிட தமிழ் நாட்டு இல்லங்களின் வாழ்வியல் நூலாக வேண்டும் என்றார்.

"திருக்குறள் நம் மறையாகி இருந்தால் நால் வருண வேதங்கள், குர்ரான்,விவிலியம், தம்மபதம் ஆகியன பெற்ற மக்கள் தொகை யிலும் திருக்குறள் வழி ஒழுகுவார் மிகுந்திருப்பர் என்றார் கலைஞர்.

ஆம்! குறளாயம் இவற்றைத்தான் சொல்கிறது. சொல்லி யதைச் செய்கிறது; செய்து வருகிறது.

கலைஞரைப் பார்க்கிறோம். நீங்கள் சொன்னதைச் செய்யுங்கள் எனக் கேட்கிறாேம்.

புத்தம் நிலைபேறு அடைய அசோகன் வந்தார். திருக்குறளுக்குக் கலைஞர் வருவாரா?

என வேட்கை யுரைத்து வினாவுகின்றது இறுதியாகச் சுட்டிய ஆசிரிய உரை.

சமயச் சால்பு

வேலா கொண்ட சமயப் புரட்சி பெரிது. மெய்யுணர்வில் தலைப்பட்டுப் பேராப் பெருநிலை எய்தும் செம்பொருட் பார்வையது அது சாதிக்கு இடந்தராத சால்பும், தாய்மொழி வழியே வழிபடும் உயிருரிமையும் கொண்டது.

(2:1)

'மீனாட்சிபுரம் மீளுமா?' என்கிறது ஆசிரிய உரை ஒன்று.

மீனாட்சிபுரத்து மக்கள் ஒரு மொத்தமாகச் சமயம் மாறி விட்டனர்; அவர்களைக் குறைகண்டு என்ன பயன்? சமயத்தில் உள்ள குறைகளை நோக்குங்கள்; நீக்குங்கள்; அப்போது