உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

125

நினைந்துருகி முழுநீறுபூசிக் கொண்டு தமிழினமே விழி என்னும் தலைப்பிட்ட அறிக்கைகளை அனைவர்க்கும் வழங்கினார். தேவார திருவாசக திருவாய்மொழிகளைப் புகவிடாது புரியா வட மொழிக்குக்கோயில் இடமாகிவிட்டதால் ஏற்பட்ட கேட்டை விளக்கினார். இங்கே அறிக்கை வழங்கவோ பேசவோ கூடாது என ஆங்கிருந்தவர் தடுத்தனர்.

இந்தக் கோயிலில் உங்களுக்கு என்ன உரிமை உண்டோ, அவ்வுரிமை எங்களுக்குமுண்டு. எங்களைப் போகச் சொல்ல எவருக்கும் உரிமைஇல்லை. நால்வர் வழியில் செயல்படும் நாங்கள் கோயிலின் இறைமையையும் தூய்மையையும் காக்கப் பாடுபடுபவர்கள், இன்றில்லாவிட்டால் நாளை உணர்வீர்கள் என்றார் இராமலிங்கர். இதனைச் சுட்டும் வேலா, "இராமலிங்கரைப் போன்ற துணிவுள்ள இளைஞர்கள் ஒவ்வோர் ஊரிலும் தோன்றினால் நம் கோயில்களில் பல நூறு ஆண்டு களாகப் படிந்த கறைகளை நீக்கித் தூய்மை யாக்கலாம். பழைய தெய்வத்தன்மை நம் கோயில்களில் திரும்பவும் தோன்றலாம். தோன்றுமா? வழிபிறக்குமா?

உணர்விருந்தால் சொல்லுங்கள்! ஒன்றாய்ச் செயல் படுவோம்!" என்கிறார். சொல்லிய வண்ணம் செய்தலே, சொல் லுதல் என்பது வேலாவின் மறை! அது திருக்குறள் வழியது தானே!

சாதி ஒழிப்பு

வீர சைவம் 'பிறப்பொப்புக்' கொள்கையது; திருக்குறள் வழியும் அதுவே; ஆதலால் முன்னர் வீரசைவராய்ப் பின்னர்க் குறளியத்தராய்த் தம்மை முழுதாக்கிக் கொண்ட வேலா. "சாதி வேற்றுமை ஒழிப்பில் அரசின் கடமை (1:11) என்று மறையும் இந்தச் சாதி வெறி இங்கு? (9:4) "சாதியை ஒழிக்கும் முயற்சியே அறிவுடைமை" (9:7) என்றெல்லாம் ஆசிரிய உரைகள் எழுதினார்.

சாதியைச் சொல்லாதே! சாதியைக் கேட்காதே! சாதியை நினைக்காதே! என்று நம் நாட்டின் ஆட்சியாளர்கள் மேடையிலே அலறுவதோடு சரி. ஆனால் அவர்கள் ஆட்சியில் பள்ளிக்குச் சேரும் பிஞ்சுக் குழந்தைகளிடம் என்ன சாதி எனக் கேட்டுத்தான் பள்ளியில் சேர்க்க அவர்கள் ஆளும் ஆட்சி சட்டம் செய்திருக் கிறது. சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. கொள்கையற்ற அரசியலாளர்கள்.