உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

ஏ! ஆட்சியாளனே, நீ மேடையிலே முழங்கியதை ஆட்சியிலே நடைமுறைப்படுத்த எத்தனை ஆண்டுகளாகச் சிந்திதுக் கொண்டு இருக்கிறாறாயா?

ஓர் உண்மை தெரியுமா? சமுதாயச் சிந்தனையாளர்களும் பேரறிஞர்களும் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை மட்க அடித்தது யார்? ஆட்சியாளர்களேதாம்! ஆட்சிக்கு வராத போது கொள்கையெல்லாம் வாய்கிழியப் பேசுகிறார்கள். வந்தவுடன் கொள்கையை மறந்து நழுவி விடுகிறார்கள். சாதியற்ற இந்தியாவை உருவாக்குவேன் என்றார் காந்தியடிகள். அவர் வழி அரசுகட்டில் ஏறிய நேரு அவர்கள், தம்மை ஒரு நாத்திகர் என்றுகூடச் சொல்லிக் கொண்டார் ஆனால் அவரால் சாதியை ஒழிக்க ஓர் அணு அளவுகூட அவரது ஆட்சிக் காலத்தில் முடிய வில்லை.

அதே போன்று தந்தை பெரியார் வழிவந்தவர்கள் கொள்கைமறந்து கோயிலைச் சுற்றிக் கொண்டும் மடத்தலைவர் களை முழங்காலிட்டுக் கும்பிட்டுக் கொண்டும் வயிறு பிழைக் கிறார்கள். இந்த நிலை எம்.ஜி. ஆர்., ஆட்சியில், இதுபோன்ற மூடப்பழக்க வழக்கங்கள் செய்யும் செயல் உச்ச நிலைக்குப் போய்விட்டது. தன்மானம் என்ற கொள்கை பேச்சிற்குக்கூட இல்லை. விளைவு, ஒளிந்திருந்த சாதி வெளிகளும் மதப்பூசல்களும் இன்று கச்சை கட்டிக் கொண்டு சங்கங்களாக முளைத்து வளர்ந்து ஆட்டம் போடுகின்றன. அதனால்தான் வயிரத்தை வயிரத்தால் தான் அறுக்கமுடியும் என்று கூறி, இனிமேல் எல்லாச் சலுகை களும் கலப்புமணம் புரிபவர்களுக்கே வழங்கவேண்டும் என்று சென்ற இதழில் நாம் வலியுறுத்தியிருந்தோம்" என்று விரித்தெழுதும் வேலா, "சாதி வெறியர்களோடு போராடி வெல்லலாம் ஆனால் சாதியால் நன்மை போகிறதே என்று கூறும் குறுகிய எண்ண முள்ள தன்னல வெறியர்களே நமக்கும் நம் முயற்சிக்கும் முட்டுக் கட்டைகள். இவர்களுடைய குறுகிய நோக்கத்திற்குச் சரியான தீர்வு முறை கண்டால் சாதிகளை அழித்து விடலாம். மதவெறியை ஒடுக்கி விடலாம்.

இதற்குள்ள ஒரே வழி பொருளாதார அடிப்படையில் வாய்ப்புகளை வழங்குவது என்பதே. இதைச் செயல்படுத்தவல்ல சிந்தனையும் அறிவாற்றலும் மிகுந்த ஆட்சியாளன் என்று பிறப்பானோ? ஆட்சிக்கு வருவானோ? அது வரை நாம் காத்திருப் போமா? அன்றிக் காலத்தை வென்று மாற்றுவோமா? சிந்தியுங்கள்” என வரைகின்றார். இது, சாதியை ஒழிக்கும் முயற்சியே அறிவுடைமை என்பதன் ஒரு பகுதி.