உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியொழிப்பு

ஈரோடு வேலா (வரலாறு)

127

குடிகெடுக்கும் குடியை ஒழிப்பதில் வேலாவுக்குத் தனிப் பெரும் உந்துதல் உண்டு. பலப்பல வேண்டா; ஆசிரிய உரை ஒன்று; அதுவும் குறளியம் தொடங்கிய எட்டாந்திங்கள் ஆசிரிய உரை. “சான்றோரால் எண்ணப்படாதவர்" என்பது தலைப்பு. முழுமையாகத் தரப்படவில்லை; சிலச் சில பகுதிகள் :

திரு. கலைஞர் ஆட்சியில் ஏற்பட்ட மதுவிலக்குத் தளர்வு என்னும் துயர முடிவால் விளைந்த கொடுமைகள் இன்னும் நம் குமுகாயத்தை விட்டு அகன்ற பாடில்லை. அவ்விடைக் காலத்தில் குடிக்கப் பழகிய தலை முறைகளை இன்றளவும் திருத்த முடியாது. துயருறும் இல்லங்களை எண்ணிப் பார்க்கும் போது நெஞ்சு குமுறுகிறது. நல்லவர்களின் இதயங்கள் அழுகின்றன.

திரு. கலைஞர் ஆட்சியின் மதுவிலக்குத் தளர்வினால் மது குடிக்கப் பழகிய எனது நண்பர் ஒருவரின் குடும்பம் இன்று நடுத் தெருவில் நிற்கிறது. அவரைப் பெற்றவர்களும் உற்றவர்களும் செய்வதறியாது திகைக்கின்றனர். அவரது தந்தையார் தாம் செய்த பெருவணிகத்திற்குத் தம் மகனும் துணையின்றிப் போன சூழலில் மகனது செயல்களால் செல்வத்தையும் இழந்து இறந்தார்.

"மற்றுமொரு குடும்பம் நாட்டுக்குழைத்துப் பட்டயம் பெற் தலைவனைக் கொண்டது. அவர் மகன் கல்லூரிக் காளையானான். மதுவிலக்குத் தளர்வு வந்தது. மகன் குடியனானான். தந்தை தம் மகன் நிலைக்கு இரங்கி உயிரையே துறந்தார்.

"மற்றுமொருவர் இன்றை இலக்கிய விழாக்களின் தலைவர். சனாதனதர்மங்'களின் காவலர். அவர் மகன் மிகப்பெருங் குடியனாக மாறி விட்ட கீழ்மையை எண்ணி எண்ணி மறுகி, நாளும் மாழ்குகிறார். இதைப் போல எத்னை குடும்பங்கள் தமிழ்நாட்டில் அவலநிலைக்கு ஆளாகியுள்ளன. அய்யகோ! நெஞ்சு பொறுக்கு தில்லையே!

CC

'என்னைப் பார்க்கிறேன். என் இல்லத்து முன்னவர்களைப் பார்க்கிறேன். மதுவிலக்கு குடி கொடிது என்று உணர்ந்த தலை முறையில் தானே நாங்கள் வாழும் மாந்தர்களாக மாறினோம். குறளியம் நடத்தும் கொள்கையராகிறோம். இது தானே தமிழகத்து வாழும் அனைத்துக் குடும்பங்களின் நிலையும்.

"தமிழக முதல்வர் அவர்களே! புரட்சித் தலைவர் அவர்களே! தங்கள் மனம் தடுமாறுகிறது; மதுவிலக்கை நீக்கத்தான் போகிறார்