உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

முதல்வர் என்று சொல்கிறார்களே! அஃது உண்மையா? கூடாது; கூடவே கூடாது.

15

"நாங்கள் அன்புடன் நினைப்பதைப் போல உங்கள் குடும்பங்களின் முன்னவர்களை நினைத்துப் பாருங்கள்; உங்கள் அமைச்சர்களின் கட்சிக் காரர்களின் குடும்பங்களின் முன்னவர் களை நினைத்துப் பாருங்கள்! ஏன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் முன்னவர்களை நினைவில் கொண்டு பாருங்கள். கோவணம் கட்டிப் பகலைப் போக்கிக் குறுகிப்படுத்து இரவைப் போக்கி வாழ்ந்ததையும் கல்வியின்றிக் கைகட்டி வாய் பொத்தி, காலில் விழுந்ததையும்... அப்பப்பா திரும்பவும் அந்த வாழ்க்கை இந்நாட்டு மக்கட்கு வர வேண்டுமா?

"புரட்சித் தலைவர் அவர்களே, தங்களை நாட்டு மக்கள் விரும்பியதற்கு என்ன கரணியம்? வாழ்க்கையில் மட்டுமின்றி, திரைப்படத்தில் கூட ஒரு குடியனாகத் தோன்ற மறுத்து நடித்ததை மறக்காதீர்கள். உங்களைப் பண்பற்றோர் சிலர் திட்டத் திற்கான பொருட்பற்றாக் குறையால் - நெருக்கி, உங்கள் கொள்கையை மாற்றக் கூறுகிறார்கள். அவர்களை அருகில் அழைத்து வாயை ஊதச் சொல்லிப் பாருங்கள். அவர்களின் திரைமறைவில் நடப்பதைப் பாருங்கள். அவர்களது நட்பை விட்டுவிட முயலுங்கள்.

66

மதுவிலக்கை எடுக்க வேண்டும் என்றால் ஆட்சியில் இருந்தே விலகி விடுவேன்" என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள் உங்களைத் தடுக்கஇன்றில்லை. எளிய குடும்பங்களின் தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் - அவல நிலைக்குக் கரணியமே குடி என்பதைக் கண்டுணர்ந்த தலைவர் காமராசர் உங்கட்கு எடுத்துக் கூற இன்றில்லை.

"மதுவிலக்கைத் தளர்த்தக் கூடாது எனக் கலைஞர் அவர் களின் இல்லத்திற்கே சென்று கேட்டுக் கொண்ட மூதறிஞர் இராசாசி உங்களிடம் வர இன்றில்லை. ஆனால் உங்களிடம் குடிப்பழக்கம் இல்லை. உங்களின் நல்ல பழக்கங்களும் பண்புகளும் தாம் உங்களை முதல்வராக்கி உள்ளன. நீங்கள் பெற்ற நல்லவை களை நாட்டுக்கும் ஆக்குவீர்கள் என்றுதான் மக்கள் நம்புகிறார்கள்.

"குடியாதவர்கள் நூற்றுக்கு 70 ஆக மாறும். இந்த மாற்றம்... தாழ்த்தப்பட்ட குடிகளை, என்றும் தாழ்வுபெற்ற குடிகளாக மாற்றும். அந்தப் பெருமையைக் கட்டிக் கொள்வதானால் மதுவிலக்கை எடுங்கள்!