உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

-

...ம்....அப்பா! தாயே! ஆண்டவனே! என்னைக் காத்தருளும் கதிர்காமத்தானே! முருகனே! ஓ... ஓ... அய்யோ...இப்படிப்பல அவலப் பேரிரைச்சல்கள் ஈழநாடு (இலங்கை) கொழும்பு புகைவண்டி நிலையத்தில் இருந்த எனது செவிகளில் சம்மட்டி கொண்டு அறைந்தது போல் விழுந்தன (1977 இல் யான் ஈழநாட்டுப் பயணம் மேற்கொண்ட போது நடந்தது). வண்டி புறப்பட 12 மணித்துளிகளே இருந்தன. உடன் ஒலிவந்த திக்கு நோக்கி ஓடினேன். என் ஈழ நண்பர்களான சுதந்திரன் இதழ் ஆசிரியர் திரு. மகேசன், திரு. நவசோதி,திரு.பேரின்ப நாயகம் ஆகியோரும் பின்வந்தனர்.

புகைவண்டிப் பெட்டி ஒன்றின் உள்ளும் புறமும் சுமார் முன்னூறு பேர்கள் அழுதரற்றிய பேரிரைச்சல்தான் அது. பிறந்தும் வாழ்ந்தும் வந்த நாட்டைத் துறந்தும் இழந்தும் தமிழ்நாடு செல்லும் மக்கட்கூட்டத்தான் என்பதறிந்தேன். உடனிருந்த ஈழ நண்பர்கள் அரசு ஒப்பந்தங்களை விளக்கினார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வகுத்த தமிழினம் தோன்றிய ஈழ மண்ணில் இருந்து கால வரலாற்றின் கொடுமையால் வெளி யேற்றப்படும் அவலத்தைக் கண்ட என் கண்கள் குளமாயின.

ஈழத்தில் இத்திங்களில் நடந்ததை நாளிதழ்களில் அறிந்த என் நெஞ்சம் நடுங்கியது. முந்தைய அவலக் காட்சியினும் கொடுமையானதோர் காட்சி என் மனத் திரையில் ஓட, கண்ணீர் செந்நீராய் வடிந்தது. தீ, கொலை, கற்பழிப்பு, சூடு,தாக்குதல்... மனத்திரையில்

எமக்கு

திராவிட இயக்கம் தந்த கலைஞர் கருணாநிதி இக்கருத்தை இதயத்துட்கொண்டு ஈழத்தமிழர் படும் துயர் மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமில்லை. இனப்பிரச்சினையும் கூட என்று கூறி பாரதத் தலைமை அமைச்சரைத் தக்கன புரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். திராவிட இயக்கம் பெற்ற தமிழக முதல்வர் ம.கோ. இரா. அவர்களும் இச்செய்திகளுடன் பாரதத் தலைமை அமைச்சரை அணுகியுள்ளார். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இவ்விருவரும் இதிலாவது செயல் படுவரா என ஏங்கும் இதயத்தினராக உள்ளனர் தமிழ்நாட்டினர் என வரைகிறார். இணைந்த பயன்பாடு இங்குக் காண இயலுமா? தங்கள் மானத்தை விட இனமானம் உயர்ந்ததென இவர்கள் என்று எண்ணினார்கள்? தன்மானத்தால் இனமானத்தைக் கெடுத்த கெடுத்துவரும் செய்திகள் - காட்சிகள் தானே மிகுதி. அதனால் பதறும் நெஞ்சத்தைப் பறையறைந்து ஆசிரிய உரையாக்கி முடிக்கிறார். (3:12)

-