உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஈரோடு வேலா (வரலாறு)

131

'ஆம்! ஒன்றைச் செய்து விடுங்கள். தமிழ் எதற்கு? தமிழ்நெறி எதற்கு? தென்திசை வரலாறு தான் எதற்கு? அதை முடித்து விடுங்கள். அதை முடித்து விடத்தானே உங்கள் தன் மானம் முனைப்பாயுள்ளது. முனைப்புகள் எங்கெங்கோ முட்டி மோதுகின்றன. ஆனால் முட்டி இணைய வேண்டிய இடத்தில் மோதல் இல்லையே! இஃது அழிவு மோதல்; ஆக்க மோதல் அன்று.

தமிழ்த் தலைவர்கள் இழுக்காற்றுச் சேற்றில் அமிழ்ந்து கிடக்கிறார்கள். மக்களே நீங்கள் விழித்து நல்ல வழிகாட்டுங்கள்! உங்கள் விழிப்பில் தான் வாழ்வும் வீழவும் வழி அமைந்திருக்கிறது” என்கிறார்.

நடுநிலையாளர் நாட்டம் என்னும் ஆசிரிய உரையில் (4:2) “தமிழீழமே பிறத்தல் வேண்டும்

தலைகள் இனிப்பல்லாயிரம் போனாலும் தமிழீழமே பிறத்தல் வேண்டும்"

என்றார். மேலும் சொல்கிறார்:

'நாம் ஈழம் சென்றிருந்தோம். விடுதலை உணர்வு ஓங்கியிருந்த வேளையில் சென்றிருந்தோம். அங்கு 'பிராமணன்' இல்லை. முதலிசெட்டி பிள்ளை இல்லை. தெலுங்கன் மலையாளி கன்னடத்தான் என்று மொழிப் பிரிவுமில்லை. ஏன்? சாதியுணர்வே தலை காட்டவில்லை அனைவரும் தமிழராய் ஒன்றி நின்றதைக் கண்டோம்" என்கிறார்! அந்நிலையே நீடித்திருந்தால், இடரும் இக்கட்டும் இன்றுவரை நீடித்துக் கொண்டு இருக்குமா? "தமிழீழம் தோன்றுமா?' (5:9). சிக்கலில் தமிழீழச் சிக்கல்” (6:2) "தமிழீழமன்று தமிழர்களின் தாயகம்" (7:5) "தாயிடமே பிள்ளை வளர வேண்டும்!" (8:1) "இந்தியா பெற்றெடுத்த சிக்கலும் ஈழம் உற்ற அல்லலும்” (8:4) “ஈழத்தமிழ் மாநிலம் தமிழ் ஈழமாகுமா?" (9:12) என்றெல்லாம் ஆசிரிய உரைகள் கிளர்ந்தன. அட்டைச் செய்திகளும் கட்டமிட்ட செய்திகளும் குலவின.

ஒன்றுபடாப் போராளிகளுக்கு ஒன்று உரைத்தார் வேலா. ஈழத்தமிழ்த் தாயகப் போராளிகளுக்கு ஒன்று கூற விரும்புகிறோம். இன்றைய நிலையில் உங்களின் பிளவுகளை நீக்குங்கள்; எல்லாப் பிரிவினரும் ஒன்றுபடுங்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களின் தலைமையை ஏற்று இறுதி உயிர்ப் போராட்டத்தை நடத்துங்கள் நன்மை தீமைகளை இப்போது ஆராய வேண்டாம். உரிமை பெறுவதொன்றே உங்களின்