உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

குறிக்கோள். பின் விளைவுகளை இப்போதுள்ள சூழ்நிலையில் சிந்திக்க வேண்டாம். உரிமைக்குப் பிறகு அவ்விளைவுகள் கொடு மையாக தீமையாக அமையுமானால் அந்தத் தலைவனையும் உரிமையுள்ளவன் அழிக்கட்டுமே! எனவே, பல்குழுவின் காரணமாக உரிமைப் போராட்டத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம். வேண்டுவது தமிழர்களின் உரிமைத் தாயகம்தான்'

இன்று தேவை ஒரே காட்சி! ஒரே போக்கு! ஒரே முடிவு!" என்று வெற்றி வகையைத் தமக்குப் பட்டவாறு தெளிவாக உரைத்தார் (7:5)

துறைதோறும்

ளைஞரை

"வாழ வேண்டியவர்களே வாருங்கள்" என அறை கூவி அழைக்கிறார் (1:6). "திருக்குறளைக் குறை கூறக் கங்கணம் கட்டிக் கொண்டதா காஞ்சிமடம்" என வினாவுகிறார். (2:9). அதனைச் சார்ந்து பேச வந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, அடையாளம் கண்டு கொளுங்கள் என வரைகிறார் (2:10). ஊராட்சிச் சிறப்பை வலியுறுத்தி பக்குவம் செய்யும் நற்பள்ளிச் சாலை திறக்கப்படுமா? என வுனா எழுப்புகிறார். (21:2) ஊட்ட உணவுத் திட்டத்திற்கே உலை வைப்பதா? என அத்திட்டத்தை வரவேற்றுப் போற்றுகிறார். மொழி வழிச் சிந்தனைக்குக் கருநாடகம் காட்டும் வழி (3:3) மடஎன்றும் கல்விக் கொள்கைக்கு வழிகாட்டுமா வங்கமும் கேரளமும் (7:9) என்றும் எழுதுகின்றார். ஆசிரியர்களே ஒதுங்காதீர்கள் (3:4) எங்கும் தமிழ் எனவாகத் தமிழாசிரியர்களே தலையிடுங்கள் (4:3) ஆசிரியர்களே பள்ளிக்குச் செல்லுங்கள் ஆட்சியாளர்களே கண்ணைத் திறவுங்கள் (6:5) அரசு அலுவலர் முறையற்ற போக்கு (6:3) துணிவுள்ளவர் துணைக்கு வாருங்கள் (6:4) கல்வியை விலைபோட்டு வாங்கினால்தான் முடியும் இங்கு இன்று (8:12) இன்னவாறெல்லாம் ஆசிரிய உரை எழுதி நெறிப்படுத்த முனைகிறார்.

-

"மே முதல் நாள் வருமா (3:10) மே - நாள் நினைவில் நடைமுறை தொழிலாளரும் தெய்வப் புலவரும் (6:10). மே முதல் நாள் ஊழல் ஒழிப்பு நாளாகட்டும் (7:19). மே நாள் (8:10). என பொருளியல் பார்வை பார்க்கிறார். குறளிய வழியில் குமுகாயம் காணவாரீர்' (2:7). புதியதோர் குறளாய உலகு படைப்போம் (6:2) இன்னன குமுகாயப் பார்வை. குறளாயச் செய்தி விரிவுடையது ஆகலின் அது, மேலே எண்ணப்படுகிறது.

(C

ஆறாத்துயர்" (1:7) எனப்பாவாணரும், பதிப்புத் துறையில் ஈடு இணையற்றவர்" (3:7) எனத் தாமரைத் திரு.வ.சுப்பையா