உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியன் நுவல்பு

வள்ளுவர், வாழ்வியல் வகுத்துத் தந்த வாழ்வியல் அறவோர். அவர்தம் நூல், வாழ்வார்க்கு 'வாழ்வியல் இன்ன' தெனத் தெளிவாய் வகுத்துத் தந்த நூல். அதன் வழியே வாழ்வும் அரசியலும் பொருளியலும் இயலல் வேண்டும் என்பதை வலியுறுத்தவும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருவர் வேண்டி இருந்தது. அவர் தாம் ஈரோடு வேலா!

'திருக்குறள் நம்மறை - நெறி' என்றவர் - என்பவர் - வேலா! அக்கொள்கையை நடைமுறைப் படுத்திக் காட்டுவதற்கே, தம் பிறவிப்பேறு வாய்த்ததாக உணர்ந்து பூரிப்பவர் வேலா! அதன் பரப்ப முரசு குறளியம்; நடைமுறைப் படுத்தும் இயக்கம் குறளாயம்!

குறளையும் வேலாவையும் பகுத்துக் காண இயலுமா? குறளையும் குறளியத்தையும் குறளாயத்தையும் பகுத்துக் காண முடியாமை போல வேலாவையும் பகுத்துக் காண இயலாது. நடமாடும் வள்ளுவமாகத் தம்மை ஆக்கிக் கொள்ள ஒருப்பட்டுள்ள ஒருவரை எப்படிப் பகுத்துக் காண இயலும்!

-

வேலா தொடர்பு குறளிய இதழால் முதற்கண் எனக்கு உண்டாயது; குறளாயத்தால் பின்னர் அது செறிந்தது; இரண்டற்ற ஒருமையுள்ளத்தால் மேலும் ஒன்றியது. அவர் தம் உணர்வுக்கும் உரைக்கும் வேறுபாடு ல்லை என்பது உடனாக்கியது! அவர்த தம் வரலாறு தனி மாந்தர் வரலாறு அன்று! திருக்குறளை வாழ்வியலாக்க விழைவார் எதிர் காலத்து எழுவார் -அனைவர்க்கும் எடுத்துக் காட்டாம் இயக்க வரலாறு. அவ்வரலாறு எளியது; இயல்பினது; ஓ ஓ! 'ஆ ஆ'! என்னும் கோலங்களோ - வாண வேடிக்கைக் காட்சிகளோ அற்றது; இயல்பான குடியில் பிறந்து, இயல்பாக வளர்ந்து, இயல்பான குடியில் பிறந்து, இயல்பாக வளர்ந்து, இயல்பான முயற்சியால் தம்மை வரலாற்றில் பதித்துக் கொள்ளத் தக்க தொண்டின் ஊற்றம் கொண்ட ஒருவரைப் பற்றியது!