உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

"சலவைச் சட்டை போடும் வாய்ப்பில் எம் குடியில் முதலாமவராக விளங்கியவர் எம் தந்தையார் வேலாயுதனாரே. தொடக்கப்பள்ளிக் கல்வியில் கருத்துக் கொண்டதும் பாட்டனார் காலத்தேதான்” எனக் கூறும் வேலாவின் திறந்த உள்ளம் - எளிய இனிய உள்ளம் எவ்வெவர் முயற்சி முன்னேற்றங்களுக்கும் தூண்டுதலாகத் திகழும் என்னும் துணிவும், திருக்குறள் தொண் டரை இனங்காண உதவும் என்னும் வேட்கையும் இவ்வரலாற்றை எழுதத் தூண்டினவாம்!

-

முற்படவே குறிப்புகளைத் தொகுத்துச் சுருக்க நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெருமக்கள் இருவர். ஒருவர், என் இளந்தைக் கால உடன்பயில்வாள் உழுவலன்பர் பாவலர் பொதிகைச் செல்வனார்; மற்றொருவர் குறளாயப் பொதுச் செயலாளர் பெரும் புலவர் மு.தங்கவேலனார்!

ஈரோட்டில் இருந்து சென்னை வரை வேலா அவர்களின் உடன் வந்த இரண்டு செலவுகளில், கேட்டும் உரையாடியும் பெற்றுக் கொண்ட கருத்துகளும் குறளியத்தின் 120 (1990 சூலை வரை) இதழ்களும், யானே பல்காலும் நேர்காணலால் அறிந்து கொண்ட செய்திகளும் ஆகிய முப்பால் வைப்புகளே இவ் வரலாற்றின் மூலப் பொருள்களாம். வேலாவால் குறள் வளமுறு கிறது; வாழ்வியலாகிறது; குறள்வழி அரசு காணத் தூண்டப் படுகிறது!

குறளால், வேலா வாழ்கிறார்; வளர்கிறார்; வளமும் வளமார் உளமும் பெறுகிறார்; திருக்குறள் மறைவழிக் குடும்பமாகக் கொண்ட தம் குடும்பச் சார்பு உடையாரும், இயக்கச் சார்புடை யாரும் திருக்குறளை நம்மறை எனப் போற்றுகின்றனர்; பொருந்தி வாழ்கின்றனர். இவ்வியக்கம் அமைந்த இயக்கம்; பரபரப்பற்ற இயக்கம்; ஆனால் படிப்படியாய்ப் பற்றிப் படர்ந்து பாராளவல்ல இயக்கம். இவ்வியக்கத்தின் வித்து வேலா!

>

தொண்டர் வரலாற்றுக்குத் 'தொகை' 'வகை விரி' உண்டு! இத்தொண்டர் வரலாற்றுக்கும் 'தொகை'யுண்டு: வகை இது; விரி வரும். தொகை தந்தவர் எவர்? ஒரு மாணிக்கர்! ஒரு மாணிக்கத்தை மற்றொரு மாணிக்கம் மதிப்பிட்ட மாணிக்க மதிப்பீடே அது!

அம்மாணிக்கம் தமிழ்க் காதல் -வள்ளுவ -வ.சுப. மாணிக்கம். என்மறை திருக்குறள்' என்ற எழுச்சி மாணிக்கம்.

.