உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

நம் நாட்டு விளைபொருள்கள் ஏற்றுமதி நிலைக்கும் பெருகிவிட்டன. இருப்பினும் நாம் நாட்டில் வறுமையின் எல்லையும் விரிந்து கொண்டே செல்கிறது. நம் ஆட்சியே நடை பெறுகிறது என்ற உரிமை வாழ்வைப் புரிந்து கொள்ளாத அறியாமை நிறைந்த மக்களும், ஏழ்மை மிக்க மக்களும் நம் நாட்டின் மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காட்டுக்கும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

ஏன் இந்த நிலை?

நம் மக்கள் ஆரிய இசுலாமிய கிறித்துவ ஆளுமைகளின் கரணியமாகப் புகுத்தப்பட்ட வேறுபாடுகளில் அடிபட்டு வீழ்ந்த பண்பாடுகளால் மனவளத்தை இழந்து விட்டார்கள். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்த முனைப்பு இன்றுவரை தோல்வியையே கண்டு வருகின்றன. அதனால்தான் குழந்தை அலறுவதைப் போல் எதைக் கண்டாலும் ‘ஒழிக' 'வேண்டாம்' என்பதிலேயே மக்கள் நாட்டம் கெள்கின்றனர். ஆங்கிலேயரை வெளியோ போ என்கிறார்கள். இந்தி ஒழிக என்கிறார்கள். ஆனால் தம்மை, தாய்மொழியை, தம் நாட்டை தம் மக்களை மறந்த மன நிலையையும் பெற்று வருகிறார்கள். எல்லாவற்றையும் ஒதுக்கக்கூடிய அச்சம் நிறை மன நிலையைக் கடந்த பல நூற்றாண்டுகளாகப் பெற்று விட்டதனால், பக்கத்து வீட்டுக்கார ருடனும் தம் வீட்டு உறவினர்களுடனும் நட்புணர்வை வளர்த்துக் கூடி வாழாத நிலை வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.

இப்படிப்பட்ட மன நிலை பெற்றிருப்பதால் தான் தமிழை தமிழ் நாட்டில் சிறப்புப் பெறச் செய்ய யாரும் அணியமாக இல்லை. அப்படி யாரேனும் இருந்தாலும் அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்கு மக்களும் அணியமாக இல்லை. நாலு எழுத்துத் தமிழில் எழுதத் தெரியாதவர்களெல்லாம் நாட்டை ஆள வந்து விடுகிறார்கள். எழுதத் தெரிந்த சில பேரில் பல பேர் போலிகள். ஒரு தமிழன் தில்லிக்குச் சென்றால் தன்னைத் தமிழனென்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறான். வெளிநாடு செல்பவனும் இந்திய மொழியில் உரையாடவும் தயங்குகிறான். இயன்றால் மேல்நாட்டு நங்கையையும் மனைவி யாக்கிக் கொள்கிறான். இவையெல்லாவற்றுக்கும் கரணியம் நாட்டுப் பற்றின்மையா? மொழிப் பற்றின்மையா? இல்லை

மனவளமின்மைதான்!