உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

139

குற்றம் சாட்டப்படுவோர் என்னும் இரண்டு அணியினரின் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் நாம் பெறுவதோ - திகிலும் திகைப்பும், ஒன்றும் புரியாக் குழப்பங் களுமே. இவற்றை அணுகிப் பார்த்து நமக்கு விண்டுரைக்க யாருமில்லை. சொல்பவனும் குற்றவாளி; சொல்லப்படுபவனும் குற்றவாளி; என்பது மட்டும் புரிகிறது. நாம் கண்ணை மூடிக் கொண்டு பின் செல்ல, காந்தியடிகளோ தந்தை பெரியாரோ இன்றில்லை. செயல்கள் சிறப்பாக நடக்கும் என எண்ணி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் கழித்தற்குறிகளாக (-) உள்ளனர். கழிவு 20 விழுக்காடா, 30 விழுக்காடா என்பதே தேர்தல்களில் நாம் காணும் நிலை. எதிலும் கூட்டல் (+) இல்லை.

இங்கு ஈழம் போல் கொடுங்கோன்மை நடக்கின்றதா என்றால் அதுவும் இல்லை; ஆனால், செங்கோன்மை தடுமாறு கின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் மனவளம் ழந்த கண்ணோட்டம் இல்லாத பட்டங்கள் பெற்ற வழி நடத்துநர்களே; அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் வேதிமப் பொருள்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. டி.டி. டி. (D.D.T) யை அமெரிக்காவில் விற்கத் தடை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் பணச் சுரங்கம் டி.டி. டி. யின் வாணிகம். இதன் உண்டாக்கத்தில் 75 விழுக்காடு நம் நாட்டில் விற்பனையாகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா இதனைப் பெற்றதனால் இந்தியக் குடி மகன் ஒவ்வொருவனும் 2 விழுக்காடு டி. டி.டியின் நஞ்சுக்கு இயல்பாகவே ஆளாகி விட்டான் என்று ஆய்வாளர்கள் அறுதியிடுகிறார்கள்.

கல்பாக்கம் அணு ஆய்வு நிலையம் மக்கள் வாழும் நெருக்கமான பகுதிக்கு அருகில் உள்ளது. அதற்கு ஏதாவது ஊறு நேர்ந்தால் (போபால் நச்சுவளி போல) 300 கல் தொலைவு நான்கு திக்குகளிலுமுள்ள உயிரினம் அழியும் என்கிறார்கள். அப்படியானால் தமிழ்நாட்டில் மதுரை மிஞ்சுமா? ஈரோடு இருக்குமா? கற்பனையிலும் நெஞ்சம் நடுங்குகிறது. மக்கள் நலனைக் கருதாது மக்கள் வாழும் இடங்களில் போபாலையும் கல்பாக்கத்தையும் உருவாக்க ஒப்புதல் தந்த மன இயல்பைச் சிந்திக்கிறோம்.

இதற்கும் மேலாக, திட்டமிட்ட ஒரு கொலையாக, மனவளத்தைப் பாழ்படுத்துவதில் எழுத்தாளர்களும் போட்டி