உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

போடுகிறார்கள். மக்களின் மனவளத்தை ஏற்படுத்தும் திண்மை உணர்வைச் சாகடிக்கத் தங்கள் எழுத்துக்களில் நஞ்சேற்று கிறார்கள். சமுதாயத்தில் தோன்றும் தீயமாற்றங்களையும் தீயவிளைவுகளையும் மட்டுமே பெரிது படுத்தி அவற்றை முறையென்றும் நிறையென்றும் இயல்பென்றும் உருவாக்கப் பார்க்கிறார்கள். இன்று நம் நாட்டில் அனைத்து மொழிகளிலும் இழிவான வெறுக்கத் தக்க கேட்டைப் பரப்பும் புதினங்களும் சிறுகதைகளும் ஏராளமாக வெளி வருகின்றன. ஒருவன் எழுதப் படிக்கத் தெரிந்ததுமே அவனுக்கு இந்த நூல்கள்தாம், அந்தப் பண்பாட்டை ஊட்டுகின்றன. இதில் இனம், மொழி, நிறம், மதம் ஆகியவேறுபாடுகள் இல்லை. மனத்திண்மை திட்டமிட்டு அழிக்கப்பட்டு மன வளம் சுருங்கிப் போகின்றது. இந்நிலையில் வளர்ந்தவர்கள்தாமே நாட்டை ஆளவருகிறார்கள். கழித்தல் குறி (-) மக்கள் பெருகப் பெருக நாம் என்று கூட்டல் குறி (+) மக்களை உருவாக்குவது?

இவற்றுக்கு இடையில் சிலர் கையுயர்த்திப் பொதுவுடைமை பேசிப் பொறுப்பாளர்கள் ஆகிவிடப் பார்க்கிறார். ஆனால் அங்கும் காண்பது கழித்தல் (-) குறிகளே கூட்டல் (+) குறியுள்ள மாந்தரை உருவாக்கினால்தான் உலகம் உய்யும். இதுவே நேர் நோக்கு. அத்தகையோரை உருவாக்குவதற்காகவே திருக்குறள் மாந்த நலத்துக்காகவே தெய்வப் புலவரால் வழங்கப் பட்டது. “மக்கள் மனவளம் பெற ஓர் உரிமை - எழுச்சிப் போராட்டம் -

நாடளாவி நடக்கட்டும். மனநலம்

மன்னுயிர்க்கு ஆக்கம்”

என்பது அது. இனி மனவளம் உருவாக்கிய இனவளமாம் குறளாயம் காண்போம்.

"இனநலம் எல்லாப் புகழும் தரும்.

குறளாயம்

ஆயம், என்பது ஆராய்ந்து எடுக்கப்பட்ட கூட்டம். குறள்நெறி பரப்பும் இதழ் குறளியம் எனப்பட்டது. அவ்வாறே, அக்குறள் நெறியை வாழ்வியலாகக் கொண்டொழுகவும் ஒழுகச் செய்யவும் தெரிந்தெடுக்கப்பட்ட அவையம் குறளாயம் ஆயிற்று.