உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

141

திராவிடர் சமயமா, வள்ளுவர் சமயமா என்றெல்லாம் எண்ணியும் ஆய்ந்தும் மறுத்தும் விளக்கமுற்றும் நிறைவில் 'குறளாயம்' என அமைந்தது. அவன் அமைவைப் பற்றி முன்னரே சுட்டியுள்ளோம்.

புதியதோர் குறளிய உலகு படைப்போம்' என்னும் முகப்புடன் 1-12-1983 இதழ் வெளி வந்தது. 15-1-1984 இல் குறள் குறளியம் - குறளாயம் பற்றிய கலந்துரையாடல் ஈரோட்டில் நிகழ்ந்தது. குறளாயம் பற்றிய வெள்ளை அறிக்கை 1-1-1984 ஆம் இதழில் (4:6) வெளிப்பட்டது.

எல்லார்க்கும்

எல்லாம் என்ற அறநெறிப் பட்ட பொதுமைச் சமுதாயத் திட்டத்தைக் குறளியம் வகுத்தளிக்கிறது. அது காட்டும் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மெய்யுணர்வு ஏனைய அறிவியல்கள் ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துக்களின்படி குறளாயம் அமைவுறும் என்பது அதில் காணும் குறளாய அமைப்புக் குறிப்பு.

அவ்விதழின் ஆசிரிய உரை குறள் - குறளியம் குறளாயம் என்பதே. அதில் குறளாயம் தோற்றமுற்ற வகை விளக்கப்படுகிறது. அது முன்னரே அறியப் பெற்றதே.

குறளாயம் தொடர்பாக முத்தமிழ்க் காவலர் பேராசிரயர் க. அன்பழகன் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலர் செ.கந்தப்பன், கோவை மு.இராமநாதன் முதலியவர்களை வேலா சந்தித்துக் கலந்துரையாடியது பற்றிய ஆசிரிய உரையும் திருக்குறள் பீடம் குருபழநி அடிகள் முதலான பலர் சிந்தனைகளும் 1-2-84 இதழில் (4:7) இடம் பெறுகின்றன.

1-3-84 (4:8) இதழின் ஆசிரிய உரை “குறளாயம் 133 பேர்" என்பது. அதில், குறளாயம் காலத்தின் கட்டாயத்தில் உருவாக்கம் பெறுகிறது. மாந்த வரலாற்றின் தொய்வில் விழுந்த சீர்கேடுகளை அகற்ற - தூய்மைப்படுத்த - குறளாயம் தோன்றுகிறது.

"இவ்வியக்கம் வளர நெடுங்காலத்திற்கு முன்னரே அடித் தளம் இடப்பட்டு விட்டது. ஆனால் மக்கள் வாழத்தக்க கூடமாகக் கட்டப்படவில்லை. அப்பெரு முயற்சியையே இன்று நாம் ஒன்று கூடித் தொடர உள்ளோம்."

"இவ்வடித்தளத்தின் மேல் 133 தூண்களை நிறுத்திக் குறளியக் கூரை பரப்புதல் வேண்டும். அந்நிழலை இவ்வுலக