உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

மாந்தர் துய்க்குமாறும். காக்குமாறும் நிலைமாறா வலிமை மிக்க ஊறில்லாத் தூண்களை முதலில் நிறுவும் பணியை மேற் கொள்ளல் வேண்டும். அத்தகு 113 தூண்களும் நிறுவிய கூடமே குறளாயம்."

ன்னபல கருத்துகளை ஆசிரிய உரை வைக்கின்றது. அமைப்பில் சேர்த்தற்குரிய விண்ணப்பப் படிவத்தையும் இவ்விதழ் வழங்குகிறது. "இவ்வமைப்பில் சேர விருப்புபவர் எந்தச் சமயத்தில் - எந்தக் கட்சியில் -எந்த இனத்தில் - எந்த நாட்டில் எந்தப்பணியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குறளாய நெறிகளை வாழ்வில் கைக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்" என்றும் குறளாயத்தின் ஒரே தலைவர் திருவள்ளுவரே. மற்ற அனைவரும் தொண்டுள்ளத்தோடு ஏற்றத் தாழ்வுகள் எதுவுமின்றி ஈகவுணர்வோடு பொறுப்புகளை - பணிகளை வகுத்துக் கொண்டு பங்காற்ற அணியமாவோம்; அணி திரள் வோம்; ஒன்று கூடுவோம்; வாரீர்" என்று அழைப்பு விடுகின்றது.

குறளாயத்தில் கலந்து கொள்வோர் தகுதி எனப் பத்துக் குறிப்புகள் குறளாய வெள்ளறிக்கையில் இடம் பெற்றுள:

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

எங்கும் யாண்டும் அன்பும் அருளும் அறவுணர்வும் அமைந்தவராக இருத்தல் வேண்டும்.

குமுகாய மேம்பாட்டிற்காக அஞ்சாமல் துணிவுடன் செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

தத்தம் வாழ்க்கைக்கு ஊதியம்தரும் ஏதேனும் தொழிலோ பணியோ செய்பவராக இருத்தல் வேண்டும்.

குமுகாயத்தைக் களங்கப்படுத்தும் இழிமைகளைச் செய்பவராக இருத்தல் கூடாது. (கலப்படம், கள்ளக் கடத்தல், பதுக்கல், கந்து வட்டி, சுண்டல், கையூட்டு மற்றும் ஏமாற்றுச் செயல்கள்)

சிற்றுணர்ச்சிக்கு அடிமையாகாதிருத்தல். (கஞ்சா, புகையிலை, இலைச்சுருட்டு, வெண்சுருட்டு போன்றவை) புலால் மறுத்தல்.

வரைவின் மகளிரைச் சேராமை, பிறன்மனை விழை யாமை, ஆடவரும் மகளிரும் கற்பு நிலை காத்தல். மயக்கம் தரும் மதுபோன்ற பொருட்களை மறுத்தல்.