உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.

10.

ஈரோடு வேலா (வரலாறு)

143

சூதாடாமை, சூது போன்றவை அனைத்தையும் தவிரித்தல்.

தாய்நாடு, தாய்மொழி, தாயகக் குடிமை புரக்கும் உறுதி.

என்பன.

குறளாயச் சிந்தனைகள் பெருவரவின ஆயின. ஒவ்வொருவர் சிந்தனையும் குறளியத்தில் பதிக்கப் பெற்றது. நல்லதை ஏற்றும், அல்லதை எடுத்துரைத்தும் மாசு நீக்கி மணியாக்கும் பொறுப் பையும் வேலா எடுத்துக் கொண்டுளார். சான்றாக ஓர் இதழில் (4:7) ஒன்பதின்மர் சிந்தனைகளும், மற்றோர் (4:8) இதழில் பதினறுவர் சிந்தனைகளும், இன்னோர் (4:9) இதழில் பதினால்வர் சிந்தனைகளும் இடம்பெற்றுள. இவற்றுள் 4:8 இதழின் பதினறுவர் சிந்தனைகளுக்கும் மறுமொழிப் பதிவும் வேலாவினால் தரப்பட்டுள்ளது. இது, அவர்தம் ஊற்றத்தையும் உண்மை யையும் உயிர்ப்பையும் காட்டுவதாய் அமைந்துள்ளது. முதன் மூன்று சிந்தனைகளுக்கு வேலாவின் மறுமொழியைக் குறிப்பிடு கிறோம்.

(C

'அரசு குறளாயத்திற்கு அமைதல் வேண்டும் என்ற தங்கள் கணிப்பு அருமையிலும் அருமை. ஆயின், பாராட்டுகளோ வாழ்த்துகளோ எதற்கு? என்ன நடந்து முடிந்து விட்டது? நடை முறை வெற்றியா வந்து விட்டது? இப்படித்தான் இத்தனை நூற்றாண்டுகளாகப் பாராட்டிக் கொண்டே செத்தோம்! செய்ய வேண்டியதைச் செய்து செத்தோமில்லை.'

"இயன்ற துணை என்ற சொல் குறளாயம் படைக்காது. ஏற்போம் என்ற சொல் கிடைக்குமா?"

"பண்புகள் என்பது நூலுக்கு இருந்து யாது பயன்? ஒற்றை மாந்தனுக்காகி வளர்ந்து குமுகாயத்திற் கானால் அன்றோ நூல். குரானுக்கும் விவிலியத்திற்கும் விழுக்காடுகள் கொடுத்தீர்கள். ஆனால் திருக்குறளுக்கு விழுக்காடு தர நடைமுறைப் படுத்தினால் அன்றோ இயலும்! கற்பனை வாழ்வில் இருந்து நீங்கி நடைமுறை வாழ்வுக்கு முயல்லாமே! துணிவிருந்தால் துணிந்து வாருங்கள்! குறளியத்தில் வழக்கும் உண்டு! தண்டமும் உண்டு; வாருங்கள்; உருவாக்குவோம்."

'ஏன் குறளயாம்?' என்னும் ஆசிரிய உரை 1-5-85 - இல் கிளர்ந்தது (4:10). 15-4-84 - இல் ஈரோட்டில் நாற்பத்தொருவர்