உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

கூடிக் குறளாயம் பற்றி ஆய்ந்த ஆய்வும், 10-6-84 -இல் மீளவும் கூடி ஆய்வது பற்றிய குறிப்பும், யாம் இறைமை நிகழ்வில் இன்பம் காண்போம். சென்ற, 15-4-84 இன் பின் இதிலோர் மாற்றம் கூட்டினோம். மறைமொழிகளாக யாம் கொண்டிருந் தவைகளை விடுத்துத் திருக்குறள் ஓதி ஓதிச் செம்பொருள் நுகர்வு கொள்ளலானோம். அறத்தைச் சொன்னோம். எம் அகத்தை யாரோ தூய்மைப்படுத்தியது போல் இருந்தது. பொருளைச் சொன்னோம். பொருந்தாப் பொருளியற் பொத்தல் களை உணர முடிந்தது. இன்பத்துப்பாலையும் ஓதினால் என்ன விளையும் என்றிட ஓதிப் பார்த்தோம். ஆம்! இல்லாள் எம் அன்புக் கிழத்தியாய் அருமை வாழ்க்கைத் துணை நலமாய் ஊடலுவகையாய் நாளும் தோன்றுகிறார். ஆம்! இதுவன்றோ வாழ்வாங்கு வாழும் முறை. மறைமொழி இது வென உணர்ந்தோம். நிறைமொழி மாந்தரைக் கண்டு கொண்டோம் என்னும் தங் குறிப்பும் அவ்வாசிரிய உரையில் திகழ்கின்றன.

அறவுள்ளத்தோடு துறவுள்ளமும், பணியுள்ளத்தோடு பைந்தமிழ் வன்மையும், எளிமைத் தோற்றத்தோடு ஏறுநடைப் பேச்சும், கொள்கை பல அறிந்தாலும் குறளிய உறுதியும் ஊதிய நோக்கமில்லாத உழைப்பும் உடையவராய்க் 'குறளியக் குடிலுக்கு ஏற்றகொள்கையர் தேவை' என்னும் வேட்டமும் குறளாயத்தில் எழுகின்றது (4:10).

"இயேசு பெருமானின் அப்போசுதல்களைப் போலவும், முகமது நபிபெருமானின் கலிபாக்களைப் போலவும், புத்த பிரானின் ததாகதர்போலவும், மார்க்கிய மெய்ப்பொருளிற்கு அமைந்த இலெனின் போலவும், குறளியக் குடிலை ஏற்போர் மெய்ப்பொருளுக்கு நன்மாணாக்கராய் அமைவர் என்றும் அவர் தம் தகவார்ந்த பணித்திறமும் சுட்டப்படுகிறது.

குறளாயத்தில் இணைய விரும்பியோர் பட்டியலும், குறளாயச் சான்றோர் நிரலும் பதிவாகின்றன. முதற்பட்டியலில் வேலா முதல் செழியன் த. ஈறாக தொண்ணூற்று இரண்டுபேர் இடம் பெற்றுளர். அடுத்த இதழ்களில் அவ்வெண் 173 ஆகின்றது. இவ்வாறே பெருகு கின்றது.

ஈரோட்டுக் கூட்டத்திற்கு வந்ததன் பின்னர், புலால் புகைப் பழக்கங்களைக் கைவிட்டு விட்டேன். என் இனம் மேம்பட வேண்டும்; இஃதொன்றே என் குறிக்கோள்; உயிரையே இதன்