உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

145

பொருட்டு விடுதற்கு அணியனான நான் ஊன் சுவையையா விடமாட்டேன்" என்றெல்லாம் வந்த அஞ்சல்களைச் சுட்டிய பெருமிதத்துடன் எதையும் ஏற்போம் குறளாயத்திற்காக என்னும் தலைப்பிட்ட ஆசிரிய உரை மலர்கின்றது (4:1) குறளாய உறுதி மொழிகள் இவையெனத் திட்டப்படுத்தவும் படுகின்றது:

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

எதையும் குறளிய நோக்கில் அணுகுவோன்.

சமுதாய மேம்பாட்டுக்காகச் செயலாற்றுவேன்.

முறையான தொழிலை மேற் கொள்வேன்.

என்பால் களங்கமில்லை; களங்கங்களைக் களைவேன். குறளிய நடைமுறைகளுக்கு முதன்மை தருவேன்.

மனத்தில் மாசிலனாகி ஒத்ததறிந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பவற்றைக் கையகப்படுத்துவேன். காதலையும் கற்பையும் தலைக் கொள்வேன்.

சாதியத்தை ஒழிப்பேன்.

நாளும் திருக்குறளை ஓதுவேன்

தாய் நாடு புரக்கும் பண்புடன் உலக மக்கள் ஒன்றே என்று குறிக்கொண்டு வாழ்வேன்.

என்பன அவை. திருக்குறள் நம்மறை என்னும் ஆசிரிய உரை 1-7-84 இதழில் (4:12) கமழ்கின்றது அதன் முகப்பு :

"யாம் மிகப் பெருமிதம் அடைந்து வருகிறோம். காரணம் குறளாயத் தொடர்பால்சிறந்த நண்பர்களைப் பெற்று வருகிறோம். யாம் எண்ணுவதையே எண்ணி இயங்கிடத் துடிக்கும் மனங் களால் நாம் மேலும் உறுதியும் செம்மையும் பெறுகிறோம். நம் நிறைமொழி மாந்தரான திருவள்ளுவப் பெருமான் நட்பிற்குப் பல அதிகாரங்களை ஏன் வகுத்தளித்தார் என்பதன் உண்மையை இப்போதே நன்கு அறிய முடிகிறது. குறளாயம் நல்ல நண்பர் களைக் கூட்டுவிக்கும் களமாக உருவாகிறது” என்று பூரிக்கிறார் வேலா. செம்பொருள் நுகர்வு இலச்சினை, கொடி, துண்டு ஆகியன பற்றியும் குறிக்கொள்ளப் படுகின்றது. "இதுகாறும் உள்ள திருக்குறள் பேரவை சங்கங்களின் அமைப்புகளை என் செய்வது?" என வினாவும் நண்பர்களுக்கு திருக்குறள் தொடர்பான எல்லா அமைப்புகளும் செயற்பட நாம் உறுதுணையாவதுடன்