உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

முன்னின்று பணியாற்றவும் வேண்டும்" என்னும் தகவார்ந்த விடையும் வெளிப்படுகின்றது.

10-6-84-இல் குறளாய இரண்டாம் நிரல் கூட்டம் நிகழ்ந்தது. விரிவாக ஆய்ந்து அமைப்புக்கு வேண்டும் செப்பங்கள் முடிவு செய்யப் பெற்றன.

25-7-84 இல் குறளியக் கூடத்தில் குறளாய ஆய்வுக் கூட்டம் நிகழ்ந்தது. தவத்திரு. அடிகளார் கலந்து கொண்டார். அதில் குறளாயச் சமுதாய அமைப்பின் நோக்கம், இதுகாறும் அடி களார் வாயிலாகப் பெற்ற கருத்துக்கள், துணை ஆகியவற்றை எடுத்துரைத்து இனிப் பெற வேண்டிய கருத்துக்களை அவாவி நிற்பதாக'க் குறிப்பிட்டார்.

அடிகளார், “சமுதாயச் சீர்திருத்தமும் சமயச் சீர்திருத்தமும் எளிமையானவை அல்ல என்றும், இச்செயற்பாடுகளுக்கு முன்னர் படிப் படியாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், முறையான ஆய்வுகள் இல்லாமல் செய்தது தமக்குப் பிடிக்கவில்லை என்றும், கருத்துச் சுதந்திரமுள்ள நாட்டில் ஆங்காங்கே அமைக்கப்படும் அமைப்புகளிலெல்லாம் தாம் சேர்தல் என்பது இயலாது என்றும் கூறினார். அவையோர் பலப்பல வினாக்கள் எழுப்பினர்; கருத்துக்கள் உரைத்தனர்.

அடிகளார் "புதிதாகச் சாதி சமயம் கடந்த ஒருமைப்பாடு அமைவதாயின் முன்னரெய்திய தோல்விகளைப் பாடாமாகக் கொண்டு நாமும் தோல்வி அடையாமல் நடை பயிலத் தக்கவாறு ஆராய்ந்து செயல்பட வேண்டும். இந் நடவடிக்கைகளைத் திருக்குறட் பேரவைச் சார்பிலேயே பொதுக்குழுக்கூட்டத்தில் ஒரு முடிவாக நீங்கள் கொண்டு வந்திருக்கலாம். செய்யவில்லை. ஆகலின் பேரவைப் பொதுக்குழுவைக் கூட்டிக் கருத்தினைக் கேட்போம். அறிஞர்களை அழைத்து ஆய்வு செய்வோம். பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம். ஒவ்வோர் அணியிலும் மிதவாதம், தீவிர வாதம் என இரு பகுப்பு உண்டு. இது தீவிரவாதக் குழுவாக எழுந்துள்ளது நன்று; அப்படியே முடிவு செய்வோம்" என்றார்.

(5:1)

-

அதனால் வேலா தம் நினைவை - செயற்பாட்டை செயற் பாட்டு இயக்கமாக எழும் குறளாயத்தைப் பற்றி அடிகளார் என்ன கருதுவார் எனத் தம் நினைவோட்டப் போக்கில்