உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

C

147

நினைக்கிறார். அவர்க்கு அடிகளார் உருவெளித் தோற்றம்' உண்டாகிறது. ஐயமும் விளக்கமும்கிளர்கின்றன. அது, "அடி களார் தோன்றுகிறார்" என்னும் பெயரீட்டில் வெளிப்படுகின்றது.

(1-7-84; 4:12)

ஆனால் நிகழ்வோ மாறாகித் தலைகீழாகின்றது.

திருக்குறளைப் பொதுமறை எனத்தான் நாம் ஏற்போம். நம்மறை என ஏற்க இயலாது என்றார். அவர் கொண்ட கோலம் எதற்கென அவையினர்க்குப் புரிந்து கேள்விக் கணைகள் தொடர்ந்தன.சினமடைந்த அடிகளார் சீற்றம் பெற்றுத் தாம் விலகிக் கொள்வதாகக் கூறினார். பரப்பும் பணியில் பெரும் பங்காற்றும் பேரவை நலிவடையக் கூடாது என எண்ணிய வேலா பிறிதொரு நாள் தொடரலாம் எனக் கூறியதன்பின் அடிகளார் விரைந்து சென்றார்.

முன்னரே, அடிகளாரொடு கலந்துரையாட வேலா பல்கால் எழுதினார்; பொங்கல் விழாவுக்கு அடிகளார் வரின் பயனாம் எனவும் எண்ணினார்; மறுமொழி அடிகளாரிட மிருந்து பெறாமையால் விதிமுறைகளை வகுத்துத் தொடர்ந்து ஆய்வுகளும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான், இந் நிகழ்ச்சி ஒரு நேர்ச்சியாயிற்று.

நிகழ்ச்சியில் நடந்த நேர்ச்சிகளில் மனம் தளர்ந்த வேலா, அடிகளாரின் நேர் எதிர் முரண்பாடான உரைகளை மாற்றி இவ்வாறு அடிகளார் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற உணர்வுடன் எழுதிய வரிகள் இவை: அடிகளாரும் வேலாவும்: "குறளாயத்தை அடிகளார் விரும்புவாரா?'

"குறளாயப் பணிகளை முயற்சிகளை மிக மிக விரும்பு கிறோம். ஆரியப் பிடிப்பு இல்லை என வந்தாலே போதும்.

ஏராளமான பணிகளையுடைய அடிகளார் நம் குறளிய

இதழ்களைப் படித்திருப்பாரா?'

"திருக்குறளுக்காக வரும் குறளியம் இதழை நாம் பாராது இருப்போமா? குறளாயம் பற்றித் தொடர்ந்து கவனிக்கிறோம். எப்பணி இருந்தாலும் இப்பணியன்றோ நம் முற்பணி; வாழ்வின் முழுப்பணி."