உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

"தம் சைவைக் கேட்காமல் குறளாய அமைப்பைத் தொடங்க முற்பட்டது சரியில்லை என்பாரோ?"

"திருக்குறளுக்கு யார் எப்பணியை எங்குத் தொடங் கினாலும் நாம் துணை நிற்போம். அதுவும் சமுதாய முயற்சியையா தடை சொல்வோம். பாராட்ட அல்லவா செய்வோம்."

"தாய்ச்சபை இருக்கத் தனி அமைப்பு எதற்கு என்று கேட்பாரா?

"தம்மின் தம் மக்கள் என்பதன்றோ நம் கொள்கை. நம்மையும் ஊக்குவிப்பதுதானே இப்பணி. தேவையான எல்லா நிலைகளிலும் உறு துணையாக இருப்போம். மாநிலக் குழுவைக் கூட்டி நாமே ஆய்வு செய்து தேவையான கருத்துக்கள் வழங்கிச் செயற்படுவோம்.

"யார் யாரோ எங்கெங்கோ அமைப்புகளைத் தொடங்கு வார்கள். நாம் இணைவதா? கருத்துச் சந்தை மலிவாகிவிட்டது. தனி வட்டம் எதற்கு என்று நினைப்பாரோ?'

"நற்பணிகளை முனைப்பாக எங்குத் தொடங்கினாலும் அங்குத் தேடி வருவோம்; கலப்போம். நெடுங்காலமாகப்பட்ட துன்பங்கள் ஒழிந்தால் போதும். மேடைதோறும் நாம் கூறிய சிந்தனைகளின் வடிவாக்கமன்றோ குறளாயம்."

"ஐயாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் எத்தனை தோல்விகள் எத்தனை பள்ளங்கள். திக்குத்தெரியாத நிலை. பலமுறை சிந்திக்காது அறிஞர்களைக் கூட்டி ஆராயாது நம்பிக்கையுள்ளவர்களுடன் தொடங்கியுள்ள இச் சிந்தனையைப்

பற்றி..."

"நெடுங்காலமாகப் பேசி எழுதிச் சிந்தித்து முடித்து விட்டோம். இன்னும் காலம் கடக்க வேண்டா. ஆய்ந்திட வருவோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையில் (சாதி - சமய கட்சி) ஊன்றியுள்ளனர். அவர்கள் தம் இசைவுக்கு விருப்பிற்கு ஏற்பப் பேசிக் குழப்பமே விளைவிப்பர். இதுவரை வந்த சிந்தனைகளே போதும். நம்பிக்கையுள்ளவர்களோடு நடைமுறைகளை ஏற்படுத்தி நெறிப்படுத்துவதே இனிப் பயன் அளிக்கும்’

இதுபற்றி நாம் தொடர்ந்து எழுதிய பல மடல்களை அடிகளார் பெருமான் கண்டாரோ இல்லையோ?"