உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

149

"அதைப்பற்றி ஏன் சிக்கல்? காணாவிட்டால் தான் என்ன? நலன் நாடிக் கொள்வதன்றோ நம் உள்ளம்.'

"திருக்குறட் பேரவையில் குறளாயம் பற்றி எத்தீர்மானமும் கொண்டு வரவில்லையே! பேரவை ஏற்குமா?"

44

'இது நடைமுறை அமைப்பு திருக்குறள் பேரவையுடன் முரண்பாடு எதுவும் இல்லை. நம் பேரவையினர் குறளாய நடைமுறைகளை ஏற்றுக் குறளாயச் சமுதாய அமைப்பில் இடம்பெற வேண்டும். பேரவை அதற்கான பட்டடையே. மிதவாதிகளில் இருந்து தீவிரவாதிகளை உருவாக்குவோம். தீவிரவாதிகள் இல்லாவிடில் மிதவாதிகட்கு உணர்ச்சியற்றுப் போகும். குழந்தை வளர்கிறது. கண்போலக் காப்பது பேரவையின்

கடமை.

95

“சுத்த சன்மார்க்கம் என்ற வள்ளற் பெருமானின் ஆறாம் திருமுறை குறளாயக் கொள்கைகளை உடையதே. உழுத நிலமாகிய வள்ளலார் நெறியையே ஏற்றுக் கொண்டால் என்ன? திருக்குறளின்படி குறளாய நெறி என்று தனித்தொன்று வேண்டுமோ, தனி இயக்கம் நமக்கு வேண்டும் என்ற தன் முனைப்பு தலை தூக்கி உள்ளதோ?"

-

"கவலற்க. இது தன் முனைப்பு அன்று நன்முனைப்பு; வள்ளலார் போற்றி ஒழுகியதே வள்ளுவர். திருக்குறட் சமுதாயம் வேறு, வள்ளலார் நெறி வேறு அன்று; ஆயினும் திருக்குறள் நெறி - குறளாயம் மாந்தர் அனைவருக்கும் உலகெலாம் ஒளிர வல்ல நெறி. அந்நெறியின் விளக்கமே ஆறாந் திருமுறை. உலகின் எந்த அறநூலுக்கும் இணையாக -உயர்வாக இயங்கி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் கனல் திருக்குறளில் கனன்று கொண்டுள்ளது. அதை ஊதிவிட்டால் போதும். உலகெங்கும் அறிவொளி எனும் ஞாயிறு ஒளிரத் தொடங்கிவிடும்.

மதுரையில் 'வள்ளுவம் வாழ்வை வளம் செய்யாது. கம்யூனிசமே உலகுய்யும் வழி' எனத் தீர்ப்புக் கண்டாரே அடி களார். சேலத்தில் தம்மைச் சிந்தனையாளராகப் பாருங்கள்; எதைச் செய்ய முடியும்? எதைச் செய்வது? எனச் சீறி விழுந்தாரே அடிகளார். அவ்வாறு பாகுபாடு ஏதும் காட்டிவிட்டால்..."

நாம் என்றும் திருக்குறள் வழியினர். இலால் குடியில் நாம் சொல்லியதை மறந்தீரோ! தேவைப்பட்டால் இந்தக் காவி