உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

உடைகளையும் கழற்றி எறியத் தயங்கோம்' என்ற சூளுரைகள் உம் செவிப்பட வில்லையா?"

"செவி மட்டுமா; மெய்யெலாம் சிலிர்த்தது. அத்திருவடி களைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட யாம் வருடி வருடி அடையாளம் கண்டு கொண்டோம். நாம் பற்றிய திருவடிகள் திருவள்ளுவரின் திருவடிகள் கண்ணீரால் கழுவி மனமலர் களைச் சாத்தித் திரும்பவும் தலை வைத்துத் திருவடிகளைச் சிக்கெனப் பற்றிக் கொண்டோம்."

மணியோசையுடன் மெல்லக் காலைப் பொழுது புலர்ந்தது. மாலை வந்தது. அடிகளார் அசைந்து வரகிறார். கூட்டம் நெருங்குகிறது, அடிகளார் தோன்றுகிறார். "ஒலிப்பதிவு நாடாச் சுருள் ஒலிக்கிறது. சில நேரங்களில் அலறுகிறது. (ஏனெனில் அவர் அன்று திருவள்ளுவராக இல்லை. ஒவ்வொரு வினாவுக்கும் எதிரிடையான எதிர்பாராத மறு மொழி தரும் குன்றக்குடி அடிகளாராக இருந்தார்! என்பதை முழங்குகிறது ஒலியிழை!) இந்நேர்ச்சி நேராமல் இருந்திருக்கக் கூடாதா?"

-

ஆம்! அடிகளார் வழியில் வேலா எப்படி வயப்பட்டு நின்றார்! அதன் ஆழ்மனக் காட்சி தானே இது! நேரில் ஒப்புகை பெற இயலவில்லை எனினும், நெஞ்சத்து ஒப்புகை பெற்றுக் கொள்ளும் நேர்த்திதானே இது! இன்றுவரை இவ்வுணர்வுப் பதிவு மாறியது இல்லையே! வாழிய வள்ளுவ நெஞ்சம்!

குறளாய விதிமுறைகளை இறுதிப்படுத்தும் கூட்டம் 26-8- 84-இல் சேலம் தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்தது. அது குறித்துத் "திரும்பிப் பார்மின்கள் (5:2) வினைத் திட்பம் என்பது மனத்திட்பம்" (5:3) என்னும் ஆசிரிய உரைகள் வெளிப்பட்டன. அவ்வாய்வுக் கூட்டத்திலேயே,

66

"குறளாய அமைப்பாளர் : வேலா புரவலர்கள் : முத்தமிழ்க் காவலர் பேரா. பெரோசு, கேவை’

என்பார் அமர்த்தம் பெற்றனர்.

"திருக்குறளைக் கற்றவன் மாந்தன் ஆவான்

திருக்குறளை ஆய்ந்தவன் அறிஞன் ஆவான் திருக்குறளின்படி நடப்பவனோ தெய்வம் ஆவான் திருக்குறளை நாளும்படி; திருக்குறளே நம்மறை”

என்னும் முழக்கம் இதழ்தோறும் தொடர் கின்றது.