உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

151

குறளாயத்தின் முதற்கிளை 1-8-84 -இல் தென்னார்க்காடு மாவட்டம் வளவனூரில் கிளர்ந்தது. புதுவைக் கிளையில் கண்ட முடிபாகச் "செம்பொருளின் மந்திரச் சொற்கள்" (5:7) வெளிப் பட்டன.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்" “நன்றின்பால் உய்ப்பது அறிவு”

இவ்விரு சொற்றொடர்களையும் சொல்லிச் சொல்லி மனத்திற்படிய உருவேற்றிக் கொள்ளல் வேண்டும். இறைவழி பாட்டின் போதும், நம் கூட்டத் தொடக்கங்களிலும், தீமைகளை விலக்கும் போதும், இன்ப துன்பக் காலங்களிலும், இம்மந்திரச் சொற்களே உறுதுணை. தத்தம் வலக்கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டு இவைகளைப் பயிலுதல் மிகுநலம் விளைக்கும். நல்லன நாளும் நிலைபெற உடனே தொடர்க! உயர் நலம் உறுக! எனத் தூண்டுகிறது" செம்பொருள் மந்திரச் சொற்கள்" (5:7).

ஈரோட்டுக் குறளாயக் கிளையின் சார்பில் தொடர்ந்து 'நிலவுக் கூட்டங்கள்' நிகழ்ந்தன. அதன் ஐந்தாம் வட்டத்தின் போது (5:7)

குறளாய அன்பர்கள் அவரவர் வாழும் ஊர்களில் ஒருங் கிணைய ஒருவழி - முழு நிலவு நாள் என்னும் குறிப்புத் தரப்பட்டது.

கிளையினர் கூடிப் பழக முழு நிலா நாளே முற்றும் பொருந்தும் எனத் தூண்டியது (5:7).

குறளியச் சாலையே நம் வழி; குறளியச் சோலையே நம் தங்கல்; குறளிய மாளிகையே நம் உறையுள்; குறளிய அரசே நம் அரசு; குறளிய மறையே நம்மறை எனக் கொண்டு உண்ணும் போதும் உறங்கும் போதும் எண்ணும் போதும் எழுதும் போதும் எப்போதும் எப்பணியில் நின்றாலும் குறளியத்திலேயே அழுந்திக் குறளாயத்தை உருவாக்கி நம் பொருளாம் செம்பொருளும் அதுவே என்னும் மெய்யுணர்வு கொண்ட வேலாவுக்கு அவ்வப் போது, குறளியக் குறளாயக் கருத்துப் பொருள் வகையால் உண்டாகிய உள் வெதுப்பல்கள் மிகப்பல உண்டாகிய உள் வெதுப்பல்கள் மிகப்பல. உண்டாகிய கழிவிரக்கங்களும் மிகப்பல என்னே இம்மக்கள் நிலை! என்னே இம்மக்கள் அடிமை நிலை! என்னே இவ்வறிவாளர் சிந்தனை! என்னே என்னே இவ்வாட்சி யாளர் போக்கு! என்னே இவ்வாய்வாளர் நோக்கு! என்றெல்லாம்