உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இரங்கவும் வைத்துள்ளன. அவ்வப் போது அவை ஆசிரிய உரையாய் வெளிப்பட்டன. அவற்றுள் ஒன்று, "சொல்வதைச் செய்வோம் வாருர்" என்பது (5:8)

"திருக்குறள் கருத்துகள் அனைத்தும் ஏற்று நடக்க இயலாது' என்கிறார் ஒரு தமிழ்ப் பாவலர்.

""

"புலால் மறுப்பும் கொல்லாமையும் துறவிகளுக்கே உரியன" என்று கூறுவதுடன்,

"கள்ளுண்ணாமை காலத்திற்கு ஏற்ற தன்று." என்று கடித்தும் குடித்தும் களிக்கிறார் ஒரு புலவர்.

"திருக்குறள் பெயரால் மக்கட்குத் திட்டங்கள் தீட்டி

வறுமை

ஒழிப்புப் புரட்சி செய்வோம்.

என்கிறார் ஒரு சிந்தனையாளர்.

திருக்குறளை வைத்துச் சமுதாயம் என்பதெல்லாம் வேடிக்கை என்பாரும் வீண் விழைவு என்பாரும் கவைக்குதவாது" என்பாருமாகத் தம் சொல்லம்புகளை விடுத்த வண்ணமுள்ளனர்.

குறளியம் உயிர்ப்புற திருக்குறள் புரட்சிகளை எல்லாம் வடித்துத் தந்த அறிஞர்களோ ஏட்டளவோடு மௌனமாகி யுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோட்டுத் திண்ணையில் இருந்து குறளியம் - குறளாயம் என எழும் முணகல் ஒலிகளைத் தம் சமய வெறிகளாலும் ஆளுமைகளாலும் அமிழ்த்திவிடச் சிலர் முயல் கிறார்கள். இவற்றை எல்லாம் என்னென்பது? அண்மைக்கால அரை நூற்றாண்டு முயற்சிகள் எழுச்சியை விளைக்க முடிய வில்லை என்றாலும்; விழிப்பை விளைத்த வரலாறுகளை யாரால் மறுக்க முடியும்?

விழித்த கண்விழிப்பு வீணாகி விட்டதோ எனக் கணக்கிடும் நிலைவந்துள்ளது. ஏற்பட்ட புரட்சிகள் பூசனை - பொய்ம்மை ஒப்பனைப் புழுதிகளில் புரண்டு கொண்டுள்ளன. ஏன் இந்நிலை? அறிவு என்பதே நன்றின்பால் உய்க்கவும், மெய்ப்பொருள் காணவும், செம்பொருள் உணரவும் என்பதை விடுத்து மெய்யுணர்வை நகைப்பிற்கு உள்ளாக்க முற்பட்டனர் சிலர்.