உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

153

விளைவு, வீழ்ச்சியைத் தழுவ நேர்ந்துளது. இத்தகு நிலையில் மீட்சியடைய ஒரே வழி திருக்குறள்தான்...

நாம் இனி, இறுதி முயற்சி ஒன்றை எடுத்துவிட அணியமாக வேண்டும். வீழ்ந்தாலும் சரி! வாழ்ந்தாலும் சரி! வெற்றி தோல்வி களை எண்ணிச் செயல்படக் கூடாது. நம் வினைத் திட்பங் களுக்கு மனத்திட்பமே வழி. நாம் சில முடிவுகளுக்கு வந்து விட வேண்டும். குழப்பங்களே கூடாது. இந்த அடிப்படையில் நம்முடன் சேர்த்துப் பத்துப்பேர் அமைந்தாலே போதும். திருக்குறளுக்காக வாழ நடக்க - காட்டாக விளங்க -பத்துப் பேர். அந்தப் பத்துப் பேரை நம்பிப் பல கோடிப்பேர், சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும் உள்ளமுடையோரை எம் உயிரோடு இணைய அழைக்கிறோம். நாம் கண்டுணர்ந்த நெறிகளை நீங்களும் கைகொள்ள அழைக்கிறோம்.

-

குறளியத்தின்பணி இனி இனி, "சொன்னதைச் செய்வோம்; சொல்வதைச் செய்வோம்" என்பதே. ஆம்! திருக்குறள் சொல் வதைச் செய்வதே குறளாயம்

என நிறைக்கிறார்.

20-1-85 இல் புதுவைக் குறளாயத் தொடக்க விழா நிகழ்ந்தது. 10-3-85 இல் தமிழகத் தலைநகரில் குறளாயக் கிளை கிளர்ந்தது. 28-4-85 இல் நெல்லை மாவட்டக் குறளாயக் கிளையும்,

கோவை மாவட்டக் குறளாயக் கிளையும் தோன்றின. 12-5-85 இல் குறளாயச் செயல் வீரர் 4ஆம் மாநிலக் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்தது.

23-6-85 இல் பொள்ளாச்சி குறளாயக் கிளை பூத்தது. இவ்வாறே மாவட்டக் கிளைகளும் நகரக் கிளைகளும் ஆங்காங்குத் தோன்றின.

குறளாயத் திருமணங்களும் நிகழத் தொடங்கின. வேலாவின் திருமகளார் திருமணம் குறளாய நெறியிலேயே நிகழ்ந்தது.

24-5-85 இல் ஈரோட்டில் நிர்மலா -செளந்திரராசன். 'மஞ்சுளா-இரவிக்குமார்'

திருமணங்கள் குறளயாத்திருமணங்களாகத் திகழ்ந்தன.