உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

18-8-85 இல் குழித்தலையில் இராசகுமார்

திருமணமும்,

மாலதி

28-8-85 இல் கோவையில் இராசகாந்தம் - இராசேந்திரன் திருமணமும் குறளாய மணங்களாக நிகழ்ந்தன.

குறளாயத் திருமணம் நிகழ்முறை (6:2) மணமக்கள் சொல்லவேண்டிய மங்கலக் குறள்கள் ஆகியவை 1-9-85 இதழில் டம்பெற்றன:

திருமணமுறை : மணமக்கள் அவையில் வீற்றிருக்க, விழாவிற்கு வந்துள்ள முதிர்ந்தவரும் பண்பாளருமான ஒருவர் மணவிழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். குடும்பத்துப் பெரியவர்களை வணங்கிப் பின் தாய்நாட்டு மண், தெய்வப் புலவர், திருக்குறள் மறை ஆகியவற்றை மணமக்கள் வணங்கிமேடைக்கு வரவேண்டும். குறளாயச் செம்பொருள் நுகர்வு செய்தலும், உறுதிமொழிகள் பத்தையும் அனைவரும் ஒருமிக்கக் கூறச்செய்தலும் வேண்டும். பின்னர், மணமக்கள் இருவரும் இணைந்து 10 குறள்களை விழாத் தலைவர் சொல்லச் சொல்லப் பின் தொடர்ந்து சொல்லி அவையினர் முன் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழிகளைப் படித்துக் கையொப்பமிட்டு மாலை மாற்றிக் கொள்வர். உறுதிமொழி இதழில், அவையிலுள்ள பதின்மர் மணமக்களின் பெற்றோர் உட்படச் சான்றொப்பம் வழங்கி மணவிழாவை இனிது முடிப்பர் மங்கலக் குறள்கள் : வாழ்க்கை : அன்பும் அறனும், அறனெனப்பட்டதே, ஆற்றின் ஒழுக்கி, வையத்துள் வாழ்வாங்கு; துணை : மனைத் தக்க, பெண்ணிற்பெருந்தக்க; தற்காத்து. நலம் : பெறுமவற்றுள், குழல் இனிது, மங்கலம் என்ப.

திருமண முறை வகுத்த குறளாயம் 'குறளாய இல்லற இணைப்பகமும் நிறுவியது.' (6:10)

22-1-88 ஆம் நாள் சென்னையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் திருமகளார் பூங்கொடி திருமணம் நிகழ்ந்தது. மேதகு கலைஞர் கலந்து கொண்ட விழா அது. குறளாய முறைப்படி வேலா அவர்கள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்கள். அம்முறையை வியந்து பாராட்டிப் பேசினார் கலைஞர். வேலா தம் உரையிலே கலைஞர் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைத் தம் ஆளுகைக்குள் கொண்டு குறளியப் பணி யாற்றும் காலம் வரத்தான் போகிறது. அதற்கு முதற்படியாம்