உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

155

பணிகளைத் தமிழுணர்வாளர் செய்தல் வேண்டும். என்றார். அச்சொல் வெல்லுஞ் சொல்லானது வரலாறு ஆயிற்று.

27-9-85 இல் வேலாவின் பேரன், திரு. சக்தி வேல் பூங்கொடி செல்வமகன் பெயர் சூட்டுவிழா குறளாய நெறியில் செம்பொருள் நுகர்வுடன் நிகழ்ந்தது. வேல் அரசு என்னும் பெயர் சூட்டப் பெற்றது.

குறளியம் வளர்க்கத் திருக்குறள் இசைப்பாடல் போட்டி நடத்தியது குறளாயம். புனைகதைப் போட்டியும் நடத்தியது; குறளியம் குறளாயப் பணிகளுக்குத் தொண்டுள்ளத்தோடு தம்மை ஈகம் செய்ய வல்லாரைத் தேடியது; தேடிக் கொண்டும் உள்ளது.

திருக்குறள் ஒலியிழையையும், திருக்குறள் கையெழுத்துப் பதிப்பையும், திருவள்ளுவர் படத்தையும், குறளாயக் கொடியையும், மார்பொட்டியையும், பரப்பும் பரப்பகமாகவும் குறளாயம் பணியாற்றியது; அது வழங்கிய துண்டு அறிக்கைகளும் வெளியீடு களும் எண்ணற்றவை. கன்னிமுதல் சென்னைவரை மிதிவண்டி உலா நிகழவும் உதவியது (7:6:5). இவை குறளாயம் செய்தவை எனின் வேலா தாமே செய்தார் என்பது மெய்மைதானே!

குறளாயத்தின் மரபில் நீத்தார் கடன் முறை செய்தலும் (6:8) வரையறுக்கப்பட்டது.

உயிர் நீத்த உடலை உடன் தூய்மை செய்து உரிய உடை களை அணிவித்தல். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அருகில் அமைதியாக நின்று குறளாய முறைப்படி செம்பொருள் நுகர்வு நிகழ்த்துதல். பின், நில்லாதவற்றை, நாள் என, நெருநல், ஒரு பொழுதும், குடம்பை, பொருளல்லவற்றை, எப்பொருள் எத்தன்மைத்து, பிறப்பென்னும், வேண்டுங்கால், ஆரா இயற்கை என்னும் குறட்பாக்களை ஓதுதல். இம்முறையைத் தேவைக் கேற்பச் சில தடவை செய்யலாம்.உயிர் பிரிந்த பத்துமணி நேரத்திற்குள் பகற்பொழுதில் நன்காடு கொண்டு சேர்த்து மண்ணீடு செய்தல் வேண்டும்.

இந்நீத்தார் கடன், முதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் க்குக் குறளாயச் சார்பில் திருக்குறள் முற்றோதலாக நிகழ்த்தப் பட்டமை நினைவில் முகிழ்க்கின்றது. பெரும்புலவர் மீ.த.வும், பாவலர் ஈவப்பரும் அக்கடனேற்றனர்.