உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

16-2-86 -இல் குறளாய நடைமுறைக் கூட்டம் நிகழ்ந்தது. குறளாயச் செயற்பாடுகளை முடுக்கி விடுதற்காகக் குறளாயத் தலைமைக் குழுவினராக மூவரையும் குழுவினராக ஒன்பதின் மரையும் மூன்றாண்டு கட்குத் தெரிந்தெடுத்ததைத் தலைமை அமைப்பாளர் வேலா அறிவித்தார்.

தலைமைக் குழுவினர் மூவர் :

வேலா. அரசமாணிக்கனார்

பெரும் புலவர் முஇ. தங்கவேலனார் பேரா.உ.பாலசுப்பிரமணியனார்

என்பார். குறளியம், குறளாயம் ஆகிய இரண்டிலும் பின்னிரு வரும் முன்னரே இணைந்து ஆற்றிய தொண்டு பெரிது.

'குறளாய நெறிமுறைகளை வகுக்க சிந்திக்க நெறிப்படுத்த நாளும் உடனிருந்து எம்மை ஆட்படுத்திய பெருமை பெரியவர் பட்டுக் கோட்டை திரு. மீ. தங்கவேலனாரைச் சாரும்" என்றும், குறளாயச் செயற்பாடுகளை வகுத்து வழிப்படுத்தும் பணியில் எம்மை விரைவாக நடத்திச் செல்ல முன்வந்து அழைத்துச் செல்பவர் சிதம்பரம் பேராசிரியர் திரு. உ. பா. அவர்கள்" என்றும் இவர்களை வேலா பாராட்டுகிறார் (6:8).

"திருக்குறள் ஒன்றிற்காகேவே இனிவாழ்வேன் என்ற உறுதிபூண்ட வெள்ளுடையாளர் ஒருவர் திடுமெனக் குறளிய அலுவலகம் வந்து நின்றார். ஓய்வு பெறும், பெற்ற உறுதியால் இளநகையுடன் ஆழ்ந்த சிந்தனைகளைப் பரப்பும் ஒளிமிகு கண்களுடன் மூவாண்டுகளுக்கு முன் (1982) அடி மேல் அடிவைத்து நடக்கும் மெல்லிய இயல்பாளராக எம்முன் சிவப்பழமாக வந்தமர்ந்தார் திரு. தங்கவேலனார். குறளியம் அவரால் பாலூட்டப் பெற்றது; தாலாட்டப் பெற்றது; நடை பயிற்றப் பெற்றது; மொத்தத்தில் தாயாகி வளர்த்தார். வளர்த்துக் கொண்டுள்ளார்" எனப் பாராட்டுகிறார் குறளிய குறளாய் நிறுவனர்.

-

ஆறாம் ஆண்டு முதல் இதழைத் தங்கவேலனார்க்குப் படைத்து உருகுகிறார் வேலா.எப்படி?"

நாம் எம்மையே இன்று சுற்றிச் சுற்றித் திரும்பிப் பார்க் கிறோம். நகைப்பும் வியப்பும் தோன்றுகின்றன."