உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

157

மேற்கொண்ட கொள்கையால் தனிமையும் அமைதியும் தவழும் நிலை நமக்குப் பிறந்துள்ளது கடந்த ஐந்து ஆண்டுக் குறளியப் பணிகள் ஈந்துள்ள இன்றைய நிலை இதுதான்.

"திருக்குறள் நம்மறை - நெறி; குறளாயம் அமைப்போம் என்ற சொற்றொடர்கள் மேடையில் பேசப்படும்போது ஏற்றுப் பாராட்டிய நெஞ்சங்கள், அவற்றை எழுத்திலும் எண்ணத்திலும் ஏற்க வேண்டும் என்ற குரல் எழுப்பியபோது விருப்பமின்றி நோக்கும் பார்வைச் சூட்டிற்கு ஆளானோம். ஏன்? மதிப்பின் மைக்கும் ஆட்பட்டோம்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் இதை வலுவாக்கியிருக்கலாம் என்பது ஒரு திருக்குறள் களஞ்சியத்தின் கூற்று.ஆடி ஓயட்டும் என்பது அம்மாமிக் குமுகாயம் வளர்க்கும் நம் சிந்தனையாளர் ஒருவர் தம்போக்கு நடப்பது நடக்கட்டும் நாலிலும் இருப்போம் எனும் பெரியோர் வாழும் இந்நாட்டில் அரிதும் பெரிதுமான ஒரு வயிரக் கட்டிபோன்றிலங்கும் பட்டு கோட்டைப் பெரும் புலவர் தங்கவேலனார் அவர்கட்கு இவ் வாறாம் ஆண்டு முதல் இதழைப் படையல் செய்து மகிழ்கிறோம்; என்பது அது.

பேரா.உ.பா.தொடர்பு, குறளியம் - குறளாயங்களுக்கு வாய்த்தது மட்டுமோ? குறளாயம் தோற்றுவித்த மழலையர் பள்ளித் தாளாளர் பொறுப்பையும் ஏற்றது! தமிழ் மாணிக்கத்தின் உறவைக் குறளாயத்தில் நிலை பெறுத்தவும் ஏந்தாயிற்று.

குறளாயத் தலைமைக் குழு எத்தகைய தகவார்ந்தது என்பதைக் குறிக்கவே இவை கூறப் பட்டனவாம்.

1986 மே 23, 24, 25 -ஆம் நாள்களில், வேலா நிலையத் திறப்பு விழா, நிலவுக் கூட்டம், திருக்குறள் முற்றோதல், தலைமை ஆட்சி செயற் குழுக் கூட்டம், குறளிய மழலையர் பள்ளித் துவக்க விழா ஆகியன நனிசிறப்பாக நிகழ்ந்தன.

-

வேலா நிலையத்தைச் திருமலி வேலா சந்திரா அம்மையார் குறளாய முறைப்படி தம் திருக்கையால் திறந்து வைத்தார். புதுவை திரு.வை. வேலாயுதனார் குறளாயக் கொடி ஏற்றினார். திரு. மீ. தங்கவேலனார் செம்பொருள் நுகர்வில் திளைப்பித்தார். குறளாய அமைப்பாளர் வேலா வரவேற்புரைத்தார். திருக்குறளார் முற்றோ தலைத் தொடங்கினார். புலவர் இளங்குமரன், பேரா. வளனரசு ஆகியோர் நிலாப் பொழிவு செய்தனர்.