உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பாவலர் முருகு சுந்தரம் மழலையர் பள்ளியைத் தொடங்கி வைத்தார். ஈரோடு நகர் மன்றத் தலைவர் திரு. செ. அரங்கராசனர் வாழ்த்துரைத்தார். திரு.கு.ச. ஆனந்தனார் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார். முப்பெருநாள் முழுமை விழாவாகத் திகழ்ந்து குறளாயச் சீர்மையை அறியச் செய்தது. நாடு தழுவிய அளவில் பேராளர்களும் பெருமக்களும் கலந்து கொண்டு, சான்றோர்கள் ஒருமித்துக் கூடி விழா வெடுத்தால் அஃது எப்படி இருக்கும் என்பதனை வெளிப்படுத்திக் களிப்பூட்டியது.

திருக்குறள் உணர்வு பெறத் தமிழ்ப் பெயர் மாற்றம் வேண்டும் எனக் குறளாயம் ஓர் அறிவிப்பு விடுத்து (8:3).

"பிறமொழிப் பெயருடைய குறளாயப் புரவலர்கள் அறங் காவலர்கள் ஆகியோர் தமிழகம் முழுதும் நன்கு அறிமுகமான வர்கள். ஆதலின், அவர் தம் பெயர்களைக் குறளாயம் சிறப்புப் பெயர்களால் அல்லது முன்னெழுத்தைச் சுட்டுதலால் மட்டுமே வழங்கும். எனினும் அவர்களும் தம் பெயர்களைத் தமிழாக மாற்றிக் கொள்வதைக் குறளாயம் பெரிதும் வரவேற்கிறது. பிறமொழி இனத்தவராயினும் அவர்க்கும் திருக்குறள் பெயர்களே ஆயத்தில் இணையுங்கால் சூட்டப் பெறும்' என அறிக்கை குறிப்பிடுகின்றது. அவ்வறிக்கையின் கீழேயே பெயர் மாற்றம் செய்தோர் பட்டியலை வைக்கின்றது குறளாயம்.

வேலா ராசமாணிக்கம் - வேலா அரசமாணிக்கம் உ.பாலசுப்பிரமணியம்-பேரா. முருகு (உ பா ) சி.தட்சிணாமூர்த்தி - தென்முக நம்பி

வே. கோதண்டராமன் -குறளேந்தி

“சொன்னதைச் செய்வோம்! சொல்வதைச் செய்வோம்.”

என்று ஆசிரிய உரை எழுதியவர் அல்லரோ வேலா. அதனால் அவரே முந்து நின்றார்!

குறளாயத்தார்க்கு ஒருநிலை ஒழுங்கு வேண்டும் என்பதை வேலா திட்டப்படுத்துகிறார். அவை இவை:

1.

குறளாயத்தைச் சார்ந்தவர் என எளிதில் அறியும் பொருட்டு எப்போதும் இலச்சினையைச் சட்டையில் அணிந்திருக்க வேண்டும்.