உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

3.

4.

5.

CC

ஈரோடு வேலா (வரலாறு)

159

குறளாயத்தார் இல்லங்களின் முகப்பில் திருக்குறள் நம்மறை - நெறி என்ற தொடர் அமைந்த பலகை வைத்தல் வேண்டும்.

குறளாயத்தார் இல்லங்களில் திருக்குறள் நாளும் ஓதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறளாயத்தார் இல்லந்தோறும் குறளியம் இதழ் வாங்க வேண்டும்.

குறளாயத்தார் ஒன்று சேர்ந்து மகிழும் திருநாள் முழுநிலவு நாளே ஆகும். (9:9).

"குறளாயத்தில் இணைய வாரீர்” என

வேண்டுகை விடுகிறார் வேலா (1033).

"சமயங்களின் நிலையாமைக் கொள்கை வாழ்க்கைச்

சிக்கல்களைத் தீர்க்கவில்லை.

கோனாட்சி அணுகிப் பார்த்தது முடியவில்லை.

குடியாட்சி தோன்றிற்று; கூடவே முதலாளியம் முகிழ்த்தது. உள்ளவர் சிலர் இல்லவர் பலர் ஆக உருவாக்கினர்.

பொதுவுடைமை மலர்ந்தது. கூடவே தனி மாந்த ஊக்கம் ஆர்வ வளர்ச்சி அறவுணர்ச்சி தனித்தன்மைகள் நீங்கின. பொறி வாழ்க்கை உருளத் தொடங்கிற்று.

குடியரசுக் கூட்டுடைமை மாற்று வழியாகத் தரப்பட்டது. விளைவு பொருளாதார இனச் சமன்பாட்டை மக்கள் முழமையாகப் பெறவில்லை.

சர்வோதயம் பிறந்தது; நடைமுறைக்குப் பொருந்தவில்லை. அரசுப் பின்னணியின்றி அதுவும் வாழ இயலவில்லை. எனவே சரியான வழி எது?

குறளாயம் குறளாயம் - குறளாயம் - இது காலத்தின்

கட்டாயம்.

குறளாயம் :

ஒரு சாதி அன்று.

ஒரு சமயம் அன்று.