உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

நிறம் அன்று.

அஃதொரு சமுதாய இயக்கம்!

அன்பால் அருளால் இணைந்து இயங்கும் ஓர் அறிவி

யக்கம்.

அது பண்பைப் பயில்விக்கும் ஒரு பள்ளி.

அது மெய்யுணர்த்தும் ஒரு கல்லூரி அது பல்துறை சிறந்த ஒரு பல்கலைக் கழகம்.

அதுவே முழுமையான வாழ்வியலைக் கூட்டும் வளமனை. அவ்வளமனையியல் அனைவரும் தோளோடு தோள் ணைந்து வாழ்வோம் வாரீர்!

என அழைக்கிறார். மனிதர்காள் இங்கே வம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ என அழைத்த அப்பரடிகள் அழைப்புப் போல்வது இது! தாம் பெற்ற பேறு உலகும் பெற வேண்டும் என்னும் உயரமைழப்பு இது! உணர்ச்சி வாயிலாக உணர்வோர் வலித்தே!

16-8-86, 17-8-86 ஆகிய நாள்களில் தலை நகரில் மறைமலையடிகள் நூலகத்து வள்ளலார் மாளிகையில் குறளாய், குறளிய விழாக்கள் நிகழ்ந்தன. கருத்தரங்கம், ஆவ்ரங்கம், பாட்டரங்கம் என்பவை நடைபெற்றன. அதன் வரவேற்புரை யாற்றிய வேலா, மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்னும் இந்த ஒருகுறளை வாழ்வில் மேற்கொள்வோமே. அதிலே நிற்போம்; அதையே சொல்வோம்; அதையே வாழ் வாக்குவோம். ஆதிபகவன் யார்? என்பது போன்ற முடிவற்ற கருத்துக்களில் நாட்டம் செலுத்திச் செலுத்தி 2000 ஆண்டுக் காலத்தை வீணடித்தோம். வள்ளுவர் எச்சாதி? எச்சமயம்? மூடநம்பிக்கை அற்றவரா? உள்வரா? மேலுலகம் கீழுலகம் உண்டா? இவற்றிலேயே காலத்தைக் கழிப்பதனால் என்ன பயன்? இவை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுங்கள். இவற்றைச் சிந்திக்காதீர்கள். திருக்குறள் புகழ் பாடிவிட்டு வேறு வேள்வியிலும் பசனையிலும் கூடுகிறோம். அதன் விளைவால் அன்றோ திருக்குறளை நடை முறைப்படுத்தாமல் விட்டோம். இனியாவது திருக்குறளைச் செயற்படுத்துவோம். திருக்குறளை ஓதியே எவ்வினையும் கொள்ளுவோம். அதிலேயே வாழ்வோம்; அதிலேயே மறைவோம்! இதற்கு மேலே வேறு வேண்டுமா?" என்றார்.