உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

161

விழாவில் பா.சு. அரியபுத்திரனார், வ.சுப. மாணிக்கனார், கல்லை தே. கண்ணன், இரா. இளங்குமரன், குமர நடவரச ஈவப்பனார், பொ. ஐயனாரப்பன், வண்ணப்பூங்கா வாசன், அரு கோபாலன், மூர்த்தி, மு. தங்க வேலனார், அண்ணாமலை அடிகள், ஈழவேந்தன்ஒ, இரா. முத்துக்குமாரசாமி, வான்மதி, உ.பாலசுப்பிரமணியம், மா. சு. சம்பந்தன், பெருங்கவிக்கோ, செயசீலன், முததமிழ்க்காவலர், த. கோவேந்தன், அவ்வை நடராசனார், வை. வேலாயுதம், படை மேல்நர் சாமிநாதன், வ.வேம்பையன், வீ. செ. கந்தசாமி ஆகியோர் பங்கு கொண்டனர்.

"திருக்குறள் நம்மறை என்று ஒருவன் ஒத்துக் கொள்ளா தவன் ஆயின், அன்றே திருவள்ளுவர் சொன்னது போல் பிறப்பின் கண் ஐயப்படும் என்று எண்ணுங்கள். ஒவ்வொரு வனுடைய வாழ்க்கையை உயர்த்தும் நோக்கத்தில் குறளைப் பார்க்க வேண்டும் என்பதால் அது என்மறை ஆகிறது" என்று தம் பொழிவில் குறிப்பிட்டார் வ.சுப.மா. (7:2)

"வேலா இராசமாணிக்கம், நல்ல குறள் தொண்டர், உணர்வுமிக்க தொண்டர், செயல் வீரர், திருக்குறளுக்கு என்று ஓர் அமைப்பும் ஓர் இதழும் கண்ட முதல் தமிழர் அவர். அவருக்கு நாமெல்லாம் துணை நிற்க வேண்டும் என்றார் முத்தமிழ்க் காவலர் (7:2)

12-7-77 இல் மதுரைமாநகரில் வேலா தலைமையில் குறளாய மாநாடு நிகழ்ந்தது. அதில் முத்தமிழ்க்காவலர், மூதறிஞர் வ.சு.ப.மா வழக்கறிஞர் கே. மீனாட்சி சுந்தரனார், வானொலி நிலைய இயக்குநர் விசய திருவேங்கடம், திருக்குறள் பெருமாள், திரு. இளங்கோ பாண்டியன், பதின்கவனகர் கனக சுப்புரத்தினம், வே. அறிவுடை நம்பி ஆகியோரும் திரு. மீ.த.. திரு. உ.பா. திரு. இளங்குமரன் ஆகிய குறளாயக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

11-10-87 இல் கோவை மாநகரில் குறளாய மாநாடு நடை பெற்றது. வேலா தலைமை ஏற்றார். முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார், பெருங்கவிக்கோ வா.மு.சே., அரு. கோபலன், ந. ஆறுச்சாமி, புலவர் வடிவேலன், மூதறிஞர் வ.சுப.மா., பதின் கவனகர் கனகசுப்புரத்தினம், கு.வெ.கி. ஆசான்.புலவர் இளங்குமரன்; புலவர் மீ.த.பேரா உ.பா. ஆகியோர் கலந்து

கொண்டனர்.