உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

"குறளாயக் கொள்கை விளக்கம்” – வருமாறு

163

குறளாயத்தின் ஒரே தலைவர் தெய்வப் புலவர். திருக்குறள்

வழி நாம் நடப்போம். உலகு நம் வழி நடக்கும்.

திருக்குறள் நம்மறை - நெறி.

திருக்குறளைக் கற்றவன் மாந்தன் ஆவான். திருக்குறளை அறிந்தவன் அறிஞன் ஆவான். திருக்குறளின்படி நடப்பவனோ தெய்வம் ஆவான். திருக்குறளே நம்மறை - நெறி.

செந்தமிழே நம்தாய்!

திருக்குறளே நம்மறை! நந்தா ஒழுக்கமே நம்படை! தாழ்வு போக்கிடும் குறளாயம்! தடைகள் நீக்கிடும் குறளாயம்! வாழ்வு சேர்த்திடும் குறளாயம்! மானம் காத்திடும் குறளாயம்! தமிழ்நாட்டு மக்கள் தமிழராக வாழ உலகினர் நல்ல மாந்தராகத் திகழ திருக்குறள் நெறி ஒன்றே வழி! முப்பால் வழியில் தப்பாது ஒழுகின் இப்பார் புகழ நிற்பான் தமிழன்! வையகம் தனக்கே ஒரு மறையாம் வள்ளுவர்தந்த திருமறையாம்!

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

திருக்குறள் எங்கள் வாழ்க்கையின் வேர்!

குறள் நெறிவிட்டால் வாழ்வில்லை!

குறள் நெறி நின்றால், தாழ்வில்லை!

குறளியம் கொள்வோம்!

குறளாயம் காண்போம்!

செம்பொருள் நுகர்வுக்குரிய திருக்குறள் மந்திரச் சொற்

றொடர்கள் நான்கு:

1.

2.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

நன்றின்பால் உய்ப்பது அறிவு

3.

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்