உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

அறன் எனப்பட்டதே இல்வாழ்கை

இறைவழிபாடு, பிறந்தநாள், பெயர் சூட்டல், காதுகுத்து, பூப்பு நீராட்டு, திருமணம், புதுமனை புகுதல், இறந்தார் கடன் முதலிய அனைத்தும் திருக்குறள் வழிச்செய்தலே சாலச் சிறப்பு. நல்லாட்சி நாட்டில் நிலவக் குறளாயம் வழங்கும் பத்துக்

1.

2.

3.

4.

5.

6.

கட்டளைகள்

குடியரசு - குடும்ப அரசு ஆகக் கூடாது. நல்லவர்களும் வல்லவர்களும் நாட்டின் பல திக்குகளில் இருந்தும் பல குடும்பங்களில் இருந்தும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். கட்சித் தலைமையாக ஆளுவோரின் மக்கள், மாப்பிள்ளை, மருமகன், மனைவி, மனைவிப் போலி, நெருங்கிய உறவினர்கள் தொடர்ந்து ஆட்சித் தலைமையில் ஏறும் பரம்பரை ஆட்சி சட்டத்தால் தடுக்கப்பட வேண்டும்.

சான்றோர் வழிச் சமுதாயமும் ஆட்சியும் அமைய, கட்டுப்பாடுகளுடைய வேட்பாளர் தேர்வுமுறை வேண்டும். (ஒழுக்கம், ஆன்ற குடிப்பெருமை, கல்வி, ஒரு நல்ல குடும்பம், நாட்டின் பண்பாடு, மதுக்குடி இன்மை, செல்வ நிலை முதலியவை பேணப்படல் வேண்டும்)

நாட்டில் 2 (அ) 3 கட்சிகளுக்குமேல் இருக்கக் கூடாது.

தேர்தல் செலவுகளை அரசே ஏற்கவேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உடல்நல முள்ளவராய் 40 அகவைக்கு மேலும் 65 அகவைக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

தலைமை ஆட்சியில் இருந்து ஓய்வு பெற்ற வர்களும் சான்றோர்களும் பல்கலை அறிஞர்களும் கூடிய பதின்மர் கொண்ட அவை ஒன்று தலைமை ஆட்சி யாளருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட வேண்டும்.