உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

8.

9.

10.

ஈரோடு வேலா (வரலாறு)

165

கையூட்டுப் பெறும் ஆட்சியாளர்களையும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களையும் கடும் தண்டனைக்கு உரியவர்கள் ஆக்க வேண்டும்.

குடியரசு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் எந்த ஒரு பதவியிலும் ஒருவர் இரண்டு முறைக்குமேல் இருக்கக் கூடாது. என முறைப்படுத்தப்பட வேண்டும்.

செல்வக் குவிப்புக்கு மேல் மட்டம் குறிப்பிடப்பட்டு அவ்வப்போது ஆய்வுக்குட்பட வேண்டும். செல்வக் குவியலைத் தடுக்க வேண்டும்.

நாட்டில் 18 அகவை வந்த அனைவருக்கும் ஒளிப் படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதில் அவர்கள் சொத்து விவரமும் குறிப் பிடப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

குறளியம் : 8.9.23.