உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

இருமொழிக் கொள்கை ஏமாற்றுவது!

ஒருமொழிக் கொள்கையே உகந்தது"

169

என முழங்கியவர் வேலா (6:12). "தலைநகரில் தமிழ்தான் இல்லை" என வெம்பி வெதும்பி எழுதியவர் வேலா (8:2). தமிழ் எழுத்து வடிவச் சீரழிப்பைத் தடுத்து நிறுத்திய தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறார் வேலா (9:12)

இத்தகு ஊற்றமுடைய வேலாவை இனங்கண்டார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்; மாணிக்கனார் படைத்த வள்ளுவத்தால் உள்ளெலாம் உள்கிக் கிடந்த வேலா, தமிழ் வழிக்கல்விக்காகத் தம் முதுமையையும் தம் பதவிப் பெருமையையும் எண்ணாமல் செய்துவரும் தொண்டினை எண்ணிப் பூரித்தார். தம்மை அத்தொண்டுக்கு ஆட்படுத்திக் கொண்டார்; குறளியத்தைத் தமிழ் வழிக்கல்வியியக்கப் பரப்பகமாகவும் குறளாயத்தைத் தொண்டுத் துணைக் கழகமாகவும் கொண்டார். ஏன்?

"பிற சமயங்களோ தமிழின் துணையில்லாமல் வளரும்; நம் குறளாயம் தமிழ்த் துணையின்றி வளராது. அதனால் தமிழொடும் திருக்குறளொடும் பின்னிப் பிணைந்த தகைமையை உணர்ந்து குறளாயத்தை மேற்கொண்டு வளர்த்தல் வேண்டும்" எனக் கண்டவர் அவர் (6:3:12).

"குறளாயத்தின் செயல்திட்டங்களை அவ்வப்போது படித்து வருகின்றேன்.தக்கவர்கள் பலர் உறுப்பினராக இருக்கவும் காண்கிறேன். குறளியக்கம் எந்த அளவு இருந்தாலும் அது தமிழியக்கமும் மனித இயக்கமும் ஆம். எந்த இயக்கத்துக்கும் இக்காலத்துக் கிளர்ச்சி என்ற பூசல் விளம்பரமும் கிளர்படையும் வேண்டியுள. அப்போதுதான் கவனம் திரும்பும் போலும்" என மூதறிஞர் செம்மல் தொடர்பாகின்றார் (6:3:36). ஏழாம் ஆண்டின் முதல் வெற்றி அவர்க்குப் படையலாக்கவும் பெறுகின்றது. ஏன்? "திருக்குறள் என்மறை என்பதே ஏற் சொல்" என வள்ளுவர் பொழிவு வைத்தவர் அவரல்லரோ! அவ்வைப்பு அன்றோ நம்மறைக்கு மூலம்!

தலைநகரில் தமிழ்தான் இல்லை என்னும்" ஆசிரிய உரை (8:2) நிறைவில் மருத்துவத்தில் சட்டத்தில் பொறியியலில் அறிவியலில் கணக்கியலில் ஆட்சியியலில், அனைத்துத் துறை களிலும் தமிழ் இடம் பெற வேண்டும் அல்லவா! செய்திருக்க வேண்டிய முதல் அடிப்படைப் பணியல்லவா!'