உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

CC

இளங்குமரனார் தமிழ்வளம்

-

28

இதனையெல்லாம் எண்ணி நினைந்து நினைந்து உருகி, தமிழ்நாட்டின் அடிநிலைப் புரட்சியாகத் தமிழ்வழிக் கல்வியி யக்கத்தினை மூதறிஞர் செம்மல் வ.சுப.மா.அவர்கள் இன்று தோற்று வித்துள்ளார். இவ்வியக்கம் ஒன்றினால் தான் எல்லா விடிவும் தமிழ்நாட்டுக்கு வரும் என்று அறுதியிட்டன்றோ நல்லோரை நாளெல்லாம் நாடுகிறார் அவர்" எனத் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை ஆற்றுப்படுத்தி எழுதுகின்றார். வேலா.

“தாய்த் தமிழைக் காக்கும் போராட்டம் வெல்க” என்னும் தலைப்புடனும் வ.சுப.மா. படத்துடனும் வேல் 9 வெற்றி 1 வெளிப்பட்டது. அதில்,

"முதல் வகுப்பில் இருந்து ஆங்கிலமா!

தமிழ் ஒலிப்பு முறையே மெல்ல அழிந்து விடும்!'

"தமிழ் வழிக் கற்றவர்கட்கே தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு - நெடுநாட்களாக இவ்விரு செய்திகளும் நம் அரசியல் தலைவர்கள் அனைவராலும் பேசப்பட்டு பின் மறக்கப்பட்டு மொத்தத்தில் ஏமாற்றப்பட்டு விட்டது.

இப்பெருங் குறையைக் களையத் தம் 72 ஆம் அகவையில் காரைக்குடி மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் 'தமிழ்வழிக் கல்வி இயக்கம்' என்ற பெயரில் உயிர்ப் போராட் டத்தைத் தமிழ் அறிஞர்களுடன் தொடங்கிவிட்டார். மதுரையிலும், சென்னையிலும், நெல்லையிலும், நாகர்கோயிலிலும், ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடந்தன. மாவட்டந் தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

தில்லைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுக் காலமாய் விடு பட்டிருந்த தேவார திருவாசகங்களை அம்பலம் ஏறிப் பாடச் செய்த இவர்தம் வெற்றியைப் போல் தாய்த்தமிழைக் கொலு வேற்றும் போராட்டமும் வெல்க! அனைவரும் துணை நிற்போம் என்கிறார்.

"சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தேரடித் தெருவரை நடந்த தமிழறிஞர்களின் ஊர்வலம்” என ஆசிரிய உரை அவ்விதழில் எழுகின்றது.

நிகழ்வை வேலா உரைக்கிறார்.