உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

171

தாங்கள் தவறாது சென்னை வந்து சேர்க என அன்பாணை மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. அவர்களிடமிருந்து வந்தது.

சித்தோட்டுப் பாவலர் ஈவப்பனாரின் அருந்துணையுடன் 23-7-88 காலை சென்னை சேர்ந்தேன்.

23-7-88 மாலை 5 மணி வள்ளுவர் கோட்ட வாயிலை அடைந்தேன்.

படிக்கும் தோற்றத்தில் அமைந்த பேரறிஞர் அண்ணாவின் சிலையை உற்று நோக்கினேன். சிலையின் பார்வை அவர் கைப் புத்கத்திலும் பட்டு, அதன் கீழே நிற்கும் எளிய மெலிந்த ஓர் உருவத்தின் மேலும் பட்டதாய்த் தோன்றியது. அவ்வுருவத்தை உற்று நோக்கினேன்.

அவர்தம் மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. அவர்கள். எப்பொழுதாவது நெஞ்சுவலி வருமாம். தமிழ்படும் துயரை எண்ணி எண்ணி அன்று வந்தது போலும். மருத்துவர் தந்த சில வில்லைகளை எடுத்து நாவின் அடியில் இட்டு மனத்துணிவால் விரைந்து உடலைத் தெளிவாக்கிக் கொண்டார். தம் பிணியை மறந்து தமிழன்னை உற்ற பிணையைப் போக்க 4 கல் ஊர்வலம் நடாத்தி வீறுநடை போட்டு வந்தார் என எழுதுகிறார்! எழுது கிறாரே வேலா! இவர்தம் உடல்நிலை என்ன? மாற்றுச் சிறுநீரகம் மாற்ற இருந்த அண்மை நிலை! ஊண் தவறினும் ஊசி தவறாத, விருந்து தவறினும் மருந்து தவறாத உடல் நிலை! கற்சிலையாக இருந்தாரே அவர், தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டு விழாவில் கலந்து கொள்ளுதற்கு மாட்டாத உயிர் இருந்தென்ன போயென்ன என வந்து உடல் நலிந்து - உயிர் ஊசலாடும் காலத்தும் உணர்வோடு கலந்து கொண்டவர்! என்ன கூட்டுறவு! வேலா தொடர்கின்றார்.

தொண்ணூற்றைத் தொடும் முத்தமிழ்க் காவலரும் எழுபத் திரண்டைத் தாண்டும் மூதறிஞர் செம்மலும் யானும் வழங்கிய சிற்றுரைகளின் பின் ஊர்வலம் தொடங்கியது. அவ்விருபெருந் தமிழ்ச் சான்றோர் பின்னே, தமிழறிஞர்களும் பற்றாளர்களும் தொடர்ந்தனர்.

அன்னைத் தமிழே வேலை பெறு! ஆங்கிலமே வெளியேறு!