உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

என்ற முழக்கங்களை வழிநெடுக முழங்கிக் கொண்டே தேரடித் தெருவை 8 மணி அளவில் ஊர்வலம் அடைந்து பொதுக் கூட்டம் தொடங்கப் பெற்றது.

"சென்னைத் தெருக்களில் எத்தனை வகையான ஊர்வ லங்கள் சென்றுள்ளன. ஆனால் உண்மையில் செயல்பட வேண்டிய ஓர் அரிய பணிக்காகத் தமிழறிஞர்கள் இன்றுதான் ஒன்று வடி வந்திருக்கின்றார்கள் என்று ஊரார் பலர் பேசுவது ஒலித்தது. இந்தியை எதிர்ப்பதிலே இருந்த ஊக்கம் தமிழை வளர்ப்பதிலே ல்லாதிருந்து விட்டோம் என்ற ஏக்கத்தை நிகழ்வைக் கண்டோ ரிடமெல்லாம் கேட்டோரிடமெல்லாம் தோன்றக் கண்டேன்

9-7-88 ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி முசுலீம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த தமிழ் வழிக்கல்வி இயக்கக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார் வேலா.

23-7-88 ஆம் நாள் வள்ளுவர் கோட்ட அண்ணாசிலை முன் வழிமொழிந்து பேசிய வேலா, ஊர்வலத்தின் பின்னர் நிகழ்ந்த கருத்தரங்கில் அமைவுரையும் ஆற்றினார்.

(9.2) ஆசிரிய உரையுடன் ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகள் தனிப்பாடமாகக் கற்றுத் தரலாம். ஆனால் தமிழ் நாட்டில் மற்றை எல்லாப் பாடங்களும் தமிழில்தான் கற்பிக்கப் படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்தான் பயிற்று மொழியாக வேண்டும். வேறு மொழி பயிற்று மொழியாகக் கிஞ்சித்தும் ஒவ்வோம்" என வரைந்தனர்.

25-9-88 இல் பெரியார் மாவட்டத் தமிழாசிரியர் கழகச் சார்பில் ஈரோட்டில் நிகழ்ந்த தமிழ் வழிக்கல்வி இயக்கப் பேரணியை வேலா தொடங்கி வைத்ார். பேரணியின் பின் நிகழ்ந்த கூட்டத்திலும் பேருரையாற்றினார்.

வ.சுப. மாணிக்கனார் எழுதிய “தமிழ் வழிக் கல்வியியக்கம்- கொள்கை விளக்கமும் நலங்களும்" என்னும் விரிந்த அறிக்கை குறளியத்தில் முழுமையாக வெளியிடப்பட்டது.

"தமிழ் வழிக்கல்வி இயக்கம் தமிழ் நாட்டில் தான் தேவை தேவை" என வலியுறுத்துகிறார் வேலா (9:6)

44

"ஆங்கிலம் வாயிலாகக் கற்பிக்கக் கூடிய எல்லாப் பள்ளி களிலும் இந்தி மட்டும் உடன் சொல்லிக் கொடுக்க வேண்டும்.