உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

173

தாய் மொழி என்ற பெயரில் தமிழ் மொழியோ வேறு எந்த மொழியோ முதல் வகுப்பில் இருந்து பாடமாக வைக்கப்படக் கூடாது. தேவையானால் 7, 8, ஆகிய இருவகுப்புகளில் மட்டும் பாடமாக வைத்து முடித்து விடவேண்டும். தமிழ் கற்பிக்க வேண்டுமானால் ஆங்கிலத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் தமிழை வைத்துக் கொள்ளலாம்" என நடுவண் அரசில் இருந்து வந்த ஆணையை மறுத்து இவ்வாறு எழுதினார் வேலா (9.6)

மூதறிஞர் செம்மல் வ.சுப. மா. இயற்கை எய்தினார்; எய்திய நாள் 24-4-89. அந்தோ மூதறிஞர் செம்மல் வ.சுப.மா மறைந்தாரே! யார் யாரை யாரால் எவரால் எப்படி ஆறுதல் படுத்துவது" என ஆசிரிய உரை எழுதி இரங்கி ஏங்கினார்

வேலா.

"ஈரோடு என்ற நினைவு வந்தால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் மான உணர்வுகளை வழங்கிய தந்தை பெரியார்; அடுத்து நினைவுக்கு வருபவர் நம் அன்பிற்குரிய வேலா அவர்களே" என ஈரோட்டில் நடந்த உயர்நீதிமன்ற நடுவர் கட்குத் திருக்குறள் பேரவை வழங்கிய வரவேற்பு விழாவின் போது கூறிய மூதறிஞர் செம்மலின் உதடுகள் இனிப் பேசாப் பேரா இயற்கையாய் விட்டனவே! நாம் எங்கு போய் அழுதாலும் இவ்வாற்றாமை தீராதே! யாம் மருத்துவ ஆய்வில் சென்னையில் இருந்தபோது ஈரோட்டில் அவர் கூறிய இச்சொற்கள் எம்மை நெக்குருகச் செய்தன.

"யாம் உடல் நலம் குன்றிய போது ஈரோட்டிற்கும் சென்னைக்கும் நேரில் வந்தும் கடிதங்கள் வாயிலாகவும் அவர் உசாவிய பாங்கும் ஊக்குவிப்பும் என் உடல்நலத்திற்கே உறுது ணையாகின. திருக்குறளுக்காக வேலா நம்மோடு நலமாக வாழ வேண்டும். உடலை மருத்துவர் சொற்படி தவறாது பேணச் சொல்லவும்" என அவர் எழுதிய வரிகளை நினைக்க நினைக்கக் கண்கள் குளமாகின்றன. எங்கட்கோர் அண்ணல் இவர்போல் இனி யார் வாய்ப்பார்!'

"மூதறிஞர் செம்மலுக்கு நாம் கூறும் உறுதியான வீர வணக்கங்கள்” தமிழ்வழிக் கல்வி இயக்கமும் திருக்குறள் நம்மறை நெறி எனும் சமுதாயமுமே.

அண்ணலை வணங்குவோம்; அவர்வழி நடப்போம்'

என்கிறார் வேலா (9:10)