உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறளாயத்தின் சார்பில் மூதறிஞர் செம்மல் மறைவு குறித்து இரங்கல் கூட்டம் தி.பி. 7-5-2020 இல்நிகழ்ந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்று; அவற்றுள் முன்னது இரங்கல்; பின்னவை வேண்டல்கள்.

2. மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. அவர்கள் தம் உயிர் மூச்சுக் கொள்கையான தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைப் பொறுப் பேற்றுச் செயற்படுத்தி வெற்றி காணத் தமிழகப் புலவர் குழுவினரை இக்குழு கேட்டுக் கொள்கிறது.

3. திருக்குறள் நெறியையும் தமிழ் உணர்வையும் கொண்டு இயங்கும் இன்றைய தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு. கலைஞர் அவர்களும் அண்ணல் வ.சுப.மா. அவர்களின் கொள்கைகளாக தமிழ்வழிக் கல்வியை நடைப்படுத்தலும் எழுத்துச் சீர்மை என்ற போலிமைகளைத் தடுத்தலும் வேண்டும் என்பன.

புலவர் குழுவும் தம் பொருளாக எடுத்துக் கொள்ள வில்லை. அரசும் கருத்தில் வைக்க வில்லை! வேலாவே, இதனை ஏற்கும் கடப்பாடு உண்டாயிற்று. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது ஏமாற்று வித்தையானது என்று கூறும் வேலா (10:3), தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் தோன்றிப் போராட வேண்டிய சூழலை இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள்.தமிழுக்காக வாழ்வது போல் ஒரு போலிமை; ஏன் இந்த நாடகம்? கல்லாத மக்களைக் கவர் வதற்கா? கோபுர வாழ்வு வாழ்வோரைக் களிக்கச் செய்யவா?

என்று வினா மேல் வினா எழுப்புகிறார்.

"வேற்று மொழிகள் பாட மொழிகளாக இருக்கலாம். பயிற்று மொழிகளாக இருக்கக் கூடாது என்பதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாத எந்த அரசையும் நாம் வருத்தக் கண் கொண்டுதான் பார்க்க இயலும்" என்று இடித்துரைக்கிறார்.

"தமிழ் வழிக்கல்விக்கு எதிர்ப்பாகத் தமிழ் நாட்டில் வேற்றுப்பயிற்று மொழித் திட்டத்திற்கு வழிவிடும் ஆட்சி யினால் இதற்கா எருவிட்டு வளர்த்தோம் என்ற சொற்றொ டர்களே குருதி நாளங்களெல்லாம் ஓடிப்பாய உதடுகள் முணு முணுக்கின்றன என இரங்குகிறார்.