உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

175

குறளிய குறளாய நிறுவனர் வேலா தமிழ் வழிக் கல்வியி யக்கத்திற்குப் பொறுப்பேற்று அறிக்கை விடுகிறார்.

நம் அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவது நம் பிறப்புரிமை; இவ்வியக்கத்தில் தமிழ்ப் பிறப்பாளர் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று ஒரே குரல் எழுப்புவோம்.

தமிழக அரசுக்கு உடனடி முறையீடு :

மண்ணின் மொழிக்கே வேலை வாய்ப்புகள்,

தமிழ்வழி கற்றவர்க்கே வேலைகள் யாவும்

தமிழ்வழி மாணவர்க்கே உயர் கல்விகள்,

வேலை ஆங்கிலத்துக்கா? வேலையின்மை தமிழுக்கா?

நீர் களைக்கா? நெருப்பு பயிருக்கா?

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.

மழலை முதல் பல்கலைக் கழகம் வரை எங்கும் தமிழ் ஒன்றே பயிற்று மொழி ஆக வேண்டும்.

பெறு!

ஆங்கிலமே வெளியேறு! அன்னைத் தமிழே வேலை

தமிழ்வழிக் கல்வியியக்கம் - குறளாயம் (10:3) என அறிக்கை விடுத்தால். தமிழ்வழிக் கல்வி இயக்கம் உருப்பெறச் செய்வோம் என வேறோர் அறிக்கையும் விடுத்தார் (106)

"தமிழ்நாடு எனப் பெயரிட அண்ணா தோன்றினார்"

-

தமிழ்வழிக் கல்வி பெற - வழங்க - யார் தோன்றுவார்? என வினாவித் தமிழ்வழிக் கல்வி இயக்கம் வலுப்பெறுகிறது எனத் தமிழ்வழிக் கல்வி இயக்க அமைப்பாளராக ஓர் அறிக்கை விடுத்தார் (10:7). தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினை நாடளாவிய அமைப்பாக உணர்வு மிக்க அமைப்பாக ஆக்குதற்குத் தக்க செயற்குழு உருவாக்கம், செயற்பாட்டு உருவாக்கம் ஆகி கிய வற்றுக்காக 11-2-90 இல் சென்னை சைதை திருவள்ளுவர் குருகுலப் பள்ளியில் கூடுமாறு அழைத்தார். வேலா அமைப்பா ளரானார். ஆட்சிக்குழுவினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1-4-90