உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இல் சென்னையில் தமிழ் வழிக்கல்வி இயக்க மாநாடு நிகழ்ந்தது. முற்பகல் தலைமையுரையை வேலா நிகழ்த்தினார்.

"சாதிகளின் அடிப்படையில் உள்ள வகுப்பு வாரி உரிமையை நீக்கிவிட்டுத் தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தில் மட்டும் படித்தவர்களை முன்னேறியவர்கள் என்றும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் படித்தவர்களைப் பிற்படுத்தப் பட்டவர்கள் என்றும், தமிழில் மட்டுமே படித்தவர்களைத் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், பிரித்து மேற் கல்வி, அரசுவேலை வாய்ப்புகள் வழங்கினால் தமிழும் வளர்ந்து விடும். சாதிகளும் மெல்ல ஒழிந்து விடும். ஏனெனில் ஆங்கிலம் பேசி வாழ்பவர்கள் இன்று ஓர் உயர்சாதியாகிக் கொண்டுள்ளனர். இவர்களே இந்நாட்டின் மன்னர்களா? மற்றவர்கள் அடிமைகளா? இவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு கூடத் தேறாது, இவ்விரண்டு விழுக்காட்டினரோடு கூடி வாழும் அரசியல்காரர்கள் நம்மைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் போலிப் பெருமையால் ஏமாற்றி விட்டனர்."

"தமிழ்வழிக் கல்வியைத் தமிழக அரசு நெறிப்படுத்தினால் எத்தகு ஈகம் புரிந்தும் துணையாகிக் காத்திடுவோம். தமிழ்வழிக் கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் வாழ்பவர் அனைவருக்கும் உரிமையுடைய ஒன்று. இதில் இந்து, இசுலாம் கிறித்துவம், ஆத்திகம் போன்ற மதச் சிக்கல்களுக்கு இடமில்லை. அதுபோல் பிராமணர் பிராமணர் அல்லாதவர் சாதிப்பிரிப்புகள், பேசும் மொழிப் பிரிவுகள் ஆகிய சிக்கல்களுக்கும் இடமில்லை. தமிழ் மாநிலத்தில் தமிழ்வழிக் கல்வி என்ற ஒரே முழக்கமே நம் முழக்கம்" என்றார் வேலா.

தமிழ் வழிக்கல்வி இயக்க உறுப்பாண்மையர்

நிறுவனர் - மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் புரவலர் - முத்தமிழ்க் காவலர்

அமைப்பாளர் - திரு வேலா

துணை அமைப்பாளர்கள் : முனைவர் வா.மு, சேதுராமன்

திரு.து. இரா. மீனாட்சி சுந்தரம்