உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

புலவர் த.சுந்தரராசன்

திரு. ந. அரணமுறுவல்

177

முனைவர் இரா. இளவரசு

நெறியாளர்கள்

முனைவர் பொற்கோ

அமைப்புக்குழு

உறுப்பினர்

நூற்றைம்பதின்பர்

www

-

சு

இயக்கத்தின் அறிக்கை - அமைப்பு செயற்பாடு என்பன வெல்லாம் குறளியத்தில் இடம் பெற்றுள (10:9) தமிழ்வழிக் கல்வி மாநாடு ஊர்வலம் -தீர்மானிப்பு இன்னவெல்லாம் 17-6-90 இல் திருச்சி மாநகரில் நிகழ உள்ளன. அறிஞர்களும் ஆர்வலர்களும் ஒன்று திரண்டு ஒரே குரல் கொடுத்தால், அரசு ஆணை பிறப் பிக்கத் தக்க தூண்டுகோல் ஆகுமல்லவோ! மக்களாட்சி முறை அதுதானே!

தமிழ்வழிக்கல்வி இயக்கம் தொடர்பான வேலாவின் மணிமொழிகள் சிலவற்றைப் பொறித்து இதனை நிறைப்போம்! தமிழில் பேசக் கூசாதே!

பிறமொழி கலந்து பேசாதே!

திராவிட ஆட்சியில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதில் ஏன் தயக்கம்? தமிழ் நாட்டில் 90ரூ மக்கள் தமிழோடு வாழ்கின்றனர். 10% மக்கள் பிறமொழி களால் பிழைக்கின்றனர். அரசு யார் பக்கம்?

ஆட்சிமொழி இந்தி அரசுமொழி ஆங்கிலம்! கோயில் மொழி சமற்கிருதம்! தமிழ் மொழிக்கு எங்கே இடம்? பெற்றதாய் தனைப் பேணாதான்

பிறவிப் பயனைக் காணாதான்.

ஆங்கில வழியில் கற்காதே!

அடிமையாய் என்றும் நிற்காதே!