உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. இனநலம்

குறளியம் குறளாயம், ஆட்சிக்குழு, பொதுக்குழு, மாநாடு, நிலாப்பொழிவு, தொடர் பொழிவு, விழாக்கள் இன்னவெல்லாம் தொடர் தொடராக இயல்தற்கு மனவளம் பொருள்வளம் ஆகியவை மட்டும் இருந்தால் போதா. இனவளம் கட்டாயம் வேண்டும். அவ்வினவளம் நலமான தாகவும் அமைய வேண்டும்; அதனால்தான் வள்ளுவம் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்றது. மேலும் “மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கின நலம் ஏமாப் புடைத்து" என்றும் கூறியது. வேலா பெற்றுள்ள இனநலம், பெரிது; பெருமைக்கும் உரியது. அஃது அவர் தம் மனநலத்தாலும் பணிநலத்தாலும் கொள்கையூற்றத்தாலும் உண்டாகியது.

வேலாவின் இனநலம் பெரிது என்பதால் எண்ணிக்கையைச் சுருக்குதல் செய்திகளைச் சுருக்குதல் ஆகிய 'சுருங்கக்கூறல்' என்னும் உத்திவகையில் சுட்டப்படுகின்றது என்க.

வேலா பயின்ற காலத்து நட்பாக வாய்த்த வருள் ஒருவர் ஏ. இரகுபதி என்பார். அவர் தோல் ஆய்வில் பட்டம் பெற்ற அறிஞர். இராணிப் பேட்டைடயல் வாழ்கின்றார்.

கல்விக்காலப் பெரு நண்பருள் ஒருவர் கே.கே. ஏ. சையது முகமது அலி என்பார். அவர் தம் பெற்றோர் பெருந்தகைமையும் பேரன்பும் முன்னரே சுட்டப்பட்டன. பெருவணிகர் அவர்.திரு. தக்கணாமூர்த்தி,ந.சி.குமார்.ந.சி. வெங்கடேசன் என்பார் உறவுப்பெருஞ் சீர்மையர்.

வணிகத் தொடர்பாக வாய்த்த நண்பர்களுள் பெரியவர் எசு.மீனாட்சிசுந்தரனார் க. சங்கரனார், கே. இலக்குமி நாராயணன், சூலபுரம் முகமதுஅலி, புலவர் செல்வராசனார், பாவலர் முருகுசுந்தரனார், தூ. இரா. மீனாட்சி சந்தரனார், அ.க. பச்சையப்பனார், நெல்லை அருணாசலனார் என்பார் குறிப்பிடத் தக்கவர்கள்.