உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

திருக்குறள் குறளியம் குறளாயம் தொடர்பான நண்புகள் பெரிது. முன்னரும் பலப் பல தொடர்புகள் குறிக்கப்பட்டுள்.

வள்ளுவர் வழி; வள்ளலார் வழிக்கு முன்னோடி. அவ்வள்ளலார் வழியர் வேலாவுக்குப் பெரு நட்பும் நேயமும் உடையவர். இரட்டை இராசமாணிக்கம் எனப்பலரும் கூறும் அருட்பாத் தென்றல் பண்டுவர் மா. செ. இராசமாணிக்கனார் குறிப்பிடத்தக்கவர். தவத்திரு ஊரனடிகளார், பழ சண்முகனார், பாவலர் இளங்கம்பன், திரு. தி.கோ. சீதாராமன், சித்தர் கழகத் தலைவர் கவிராசு மாணிக்கம் என்பார் நேயருள் சிலர்.

இயற்கை மருத்துவ வேட்கையர் வேலா. அதனால் திரு. ஆறுச்சாமி என்னும் இயற்கை மருத்துவர் குறளாய மனைக்கண் இருந்து மருத்துவக்கடமைபுரிந்தார். அவ்வகையில் பெரியார் மாவட்டத் தலைமகனார் எனப்படும் செ.ந. குப்புமுத்து ஐயா அவர்கள் நெருக்கமான அரவணைப்புடையவர்கள். மேலும் சிவசைலம் இராமகிருட்டிணர்,கோவை சுப்பிரமணியனார், பேரா. பெரோசு, கோபி வெள்ளியங்கிரி, முன்னாள் ச.ம. உறுப்பினர் கிருட்டிணசாமி, சண்முகவேல், சேலம் சின்னாண்டார் என்பவர்கள் குறிக்கத் தக்கவர்கள். வேலாவுக்கும் வீரசைவப் பெருமக்களுக்கும் பெருந் தொடர்புண்டு. அவ்வகையில் குடந்தை பெரிய மடத்துத் தலைவர், பேரூர் அடிகள், மயிலம் - பொம்மய புரம் அடிகள், சிதம்பரம் ஈசான மடத்து அடிகள், கூப்ளி மூர்சாவீர் மடத்து அடிகள்,திருப்போரூர் அடிகள், தோ.பா. நந்திகேசுவரர் பேரா.வை.இரத்தினசபாபதி என்பவர்கள் அவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள்.

திருக்குறள் மறவர் பாவலர் ஈவப்பனார், விடுதலை ஈகியர் பெரியண்ணனார், திருக்குறட்பேரவைச் செல்வர் தி.அ.சண்முக சுந்தரனார், பாவேந்தர் பட்டடை இராமலிங்கனார், பெரும் புலவர் க.ஆறுமுகனார், பாட்டுத் தென்றல் பொதிகைச் செல்வனார், புலவர் சி. மு. இராச மணிக்கனார், புலவர் வடிவேலனார். பேரா.மு.ச.சிவம், கல்வெட்டறிஞர் இராசு, வேலூர் குறளேந்தி யார், சாணிப்பூண்டி ச.த.திருஞான சம்பந்தம், பதின்கவனகர் கனக சுப்புரத்தினம், சின்னதாராபுரம் இறையரசனார், குறள்நெறியர் இசை இறை சேரலாதனார், திருவள்ளுவர் குருகுலம் இரகுபதி யார், குறள்வழி தே. கண்ணனார்,

.