உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

181

கழக ஆட்சியாளர் இரா. முத்துக்குமாரசாமியார், பேரா.ச. மெய்யப்பனார், புதுவை வை. வேலாயுதனார், இளங்கோ பாண்டியனார், படைமேல்நர் திருவண்ணாமலை சாமிநாதனார் ஆகியோர் குறளாயத் தொடர்பாளர்கள் ஆவர்..

இல்லத்திற்குவந்து இனிது தொடர்பு கொண்டுள்ள பெருமக்கள் பலர். அவருள் தவத்திரு முத்தமிழ்க்காவலர், குன்றக்குடி அடிகளார், திருக்குறளார், அருள் அரசு வாரியார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார், சிலம்பொலி செல்லப்பனார், ஒளவை நடவரசனார், மறை திருநாவுக்கரசர், மானமறவர் வீரமணி கூப்ளி மூவாயிரமடத்துப் பெருந்தலைவர், இல்கல் முதலிய ஐந்து மடத்துத் தலைவர்கள், குழித்தலை இளமுருகு பொற் செல்வியார், அமைச்சர் காளிமுத்து, பாவலரேறு பெருஞ் சித்திரனார், ஈழ வேந்தன், பதின்கவனகர் பெ. இராமையனார், தண்டபாணி தேசிகர், சாலை -சாலினியார், பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமனார், புலவர் குழந்தை, பாவலர் முருகுசுந்தரம், பாவலர் சுரதா, கு.ச. ஆனந்தனார், மறைநித்தல் இன்பனார், ரா. ளங்குமரன் ஆகியவர்கள் சுட்டற்குரியர்.

னிப்பல்வேறு வகைகளாலும் தொடர்பு கொண்ட பெருமக்களுள் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார், அழகரடிகள், அருளிசை மணி நாகரத்தினம், பேரா. ந. சஞ்சீவி, மதுரை ஞான சம்பந்தர் திருமடத்தடிகளார், கு.வே.கி. ஆசான், அன்புப்பழநீ, கேரளம் சிவானந்த பாரதியார், வள்ளுவர் வழி கண்ணனார், வீ.செ. கந்தசாமி என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

திருக்குறள் நம்மறை என்பதை ஏற்றுக் கொண்டு தம் வழிபாட்டிலும் தொழிலிலும் வாழ்விலும் சடங்குகளிலும் கடைப்பிடியாக உள்ள பாராட்டுக்குரிய பெருமக்கள் திருச் செங்கோடு தக்கணாமூர்த்தி,திருப்பூர் நா. முத்துசாமி, திருவண்ணாமலை படைமேல்நர் சாமிநாதன் என்பவர்கள். இவர்கள் மிக அணுக்கத் தொடர்பினராவர்.

இவ்வின நலம் எண்ணி முடியாது. மன நலம், இன நலத்தின் மூலம்! ஆகலின் மனநலம் விரிய விரியும் இனநலத்தைக் குறிக்க இயலாது! குறிக்கத் தக்கவர்களுள் எத்துணைப் பேர்கள் விடுபாடு பெற்றுளரோ! நல்லோர் னநலம் "விரிப்பின்