உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பெற்றுளரோ! நல்லோர் இனநலம் விரிப்பின் மிகும், தொகுப்பின் எஞ்சும்" எனச் சொல்லியமைதல் அவையடக்கம் போல்வது.

வேலாவின் வழிபாட்டாளர் மூவரும் அவர்நிலையும்

தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழிகாட்டும் தெய்வம்

பெம்மான் பசவேசர்

J

-

வழியருளிய தெய்வம்

-

திருத்தந்தை வேலாயுதனார் வழிகோலிய தெய்வம்!

சொல்லும் செயலும்

நிகழ்ச்சிகள் சில

வேலா இறைமை அழுத்த வீர சைவக் குடிவழியர்; வீரசைவ அழுத்தமும் மிக்கவர்; எனினும் "திருக்குறள் நம்மறை" என என்று அவர் வாய்சொல்லியதோ அவர் கை எழுதியதோ அன்று தொட்டு அவ்வீர சைவக்கோலமும் கொண்டிலர். வினை வேறு சொல்வேறு ஆதல், கனவினும் இன்னாது என்னும் வள்ளுவத்தை உணர்ந்து உள்ளத்தால் பொய்யா தொழுகும் வாழ்வு; வேலா வாழ்வாகும்.

தமிழ் முழக்கம்

பவானி செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ இருந்தது. அடியார் திருக் கூட்டம் நன்கொடை தண்டுதற்கு வேலாவை அணுகியது. வேலா குடமுழுக்கு விழாவின் போது தேவாரத் திருவாசகத் திருமந்திரங்கள் முழக்கப்படுமானால் தாம் அவர்கள் கேட்கும் நன்கொடையை மகிழ்வுடன் வழங்குவதாகக் கூறினார். வந்தவருள் ஒருவர் பன்னிரு திருமுறை வல்ல தோன்றல்; எனினும், வேலாவின் இவ்வுரை கேட்கப் பெறாமல் உடனே வெளியேறி விட்டார். அவர் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக இருந்தும் கொள்கையை விட்டுத்தர வேலா இசையாமை அவர்தம் உறுதிப் பாட்டுச் சான்றாம்.

முந்தும் சால்பு

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஈரோட்டுக்கு வந்தார். விடுதியில் தங்கியிருந்தார். அங்கிருந்து வேலாவுக்குத்